அடுத்த ஆதி குணசேகரனுக்காக சேனல் தரப்பு அனுகிய பிரபல நடிகர் – இவர் கண்டிப்பாக நல்ல தேர்வு தான். யார் பாருங்க.

0
2951
- Advertisement -

எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் மாரிமுத்துவின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து.

-விளம்பரம்-

இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தமிழில் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார்.

- Advertisement -

மாரிமுத்து மரணம்:

இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று முன் தினம் காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது. உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

எதிர்நீச்சல் தொடர் குறித்த சர்ச்சை:

இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் நிலைமை என்னாகப் போவது என்ற கேள்விக்குறி தான் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமே ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான். அவருடைய வசனங்களும், உடல் மொழியும் தான் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம். இனி இந்த சீரியலில் இவர் நடிக்க முடியாது என்றவுடன் அடுத்த குணசேகரன் யார்? என்ற சர்ச்சை தான் கிளம்பி இருக்கிறது.

-விளம்பரம்-

வேலராமமூர்த்தி குறித்த தகவல்:

அந்த வகையில் நடிகர் வேலராமமூர்த்தி சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் படங்களில் வில்லன் குணச்சித்திர வேடங்களில் மிரட்டி கொண்டு வருகிறார். இருந்தாலும் மாரிமுத்துவின் குரலையும் அவருடைய உடல் மொழியையும் யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்பதுதான் உண்மை. இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் வேலராமமூர்த்தி கூறியிருப்பது, எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பண்ண சொல்லி என்னிடம் சேனல் தரப்பில் கேட்டது உண்மைதான். ஆனால், இப்ப நான் சினிமாவில் பிஸியாக இருக்கிறேன்.

வேலராமமூர்த்தி பேட்டி:

இப்பவும் நான் படப்பிடிப்பில் தான் இருக்கிறேன். சீரியலுக்கான நேரம் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த மாதம் 20ஆம் தேதிக்கு மேல்தான் சினிமா சூட்டிங் முடிகிறது. அந்த தொடரில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதான். ஆனால், அது குறித்து நான் இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்திருந்த பேட்டி வெளியானதை தொடர்ந்து பலருமே ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்தால் பொருத்தமாக இருக்குமா என்று விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Advertisement