ரஞ்சித், லோகேஷ் மாதிரி இல்லாம நான் மட்டும் தான் இப்படி படம் எடுக்குறேன் அதான் என்ன விமர்சிக்கிறாங்க – அட்லீ விளக்கம்.

0
1329
Atlee
- Advertisement -

என் மீது விமர்சனம் வைப்பதற்கு இது தான் காரணம் என்று மனம் திறந்து அட்லீ கூறி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் சினிமா எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார். இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான்.

- Advertisement -

அட்லீ திரைப்பயணம்:

இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

நெட்டிசன்கள் விமர்சனம்:

இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜவான் படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பலரும் இந்த படத்தை பார்த்து அட்லியையும் ஷாருக்கானையும் கடுமையாக விமர்சித்து கூறி வருகிறார்கள். அதிலும் இந்த படத்தை பிகில், மெர்சல், தெறி, சர்தார், துணிவு, ஆரம்பம், மங்காத்தா, கத்தி, சிவாஜி,, ராஜா ராணி, துப்பாக்கி என எல்லா படங்களின் கலவை தான் ஜவான் என்று விமர்சித்து வருகிறார்கள்.  

-விளம்பரம்-

அட்லீ காப்பி சர்ச்சை:

அதிலும் சிலர், இந்த படத்தினுடைய கதை அப்படியே அஜித் நடித்த ஆரம்பம் படம் மாதிரியே இருக்கிறது என்றெல்லாம் கிண்டல் செய்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கனவே அட்லீ என்றால் காப்பி என்ற சர்ச்சை சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி- மௌனராகம் படம், மெர்சல்-மூன்று முகம் படம் என்று விமர்சித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஜவான் படம் படுதோல்வி அடைந்திருப்பதை குறித்து நெட்டிசன்கள் அட்லீயை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

அட்லீ கொடுத்த விளக்கம்:

இந்நிலையில் இது தொடர்பாக மனம் திறந்து அட்லீ கூறியது, ஏற்கனவே பார்த்த கதைகளை படமாக எடுக்கிறேன் என்பது மட்டும் தான் என் மீது வைக்கப்படும் ஒரே விமர்சனம். கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ், பா. ரஞ்சித் போன்ற நண்பர்கள் ஆக்சன், சமூக பிரச்சனை என வெவ்வேறு விஷயங்களை மையமாக வைத்து படங்கள் எடுக்கின்றார்கள். நடிகர்களை மையப்படுத்தும் மாஸ் கமர்சியல் திரைக்கதை மீது நான் ஒருவன் மட்டும்தான் நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே என் மீது விமர்சனம் வரத்தான் செய்யும். பார்வையாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை அளித்து என்னுடைய கதாபாத்திரங்கள் வாயிலாக அவர்களை உணர்ச்சி வசப்படுத்துவது தான் என்னுடைய நோக்கம். இதுவரை அதை சரியாக செய்துள்ளேன் என நம்புகிறேன் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement