என் பையன் சின்ன வயசுலேயே இறந்துட்டான், மகள கட்டி கொடுத்த இடத்துலயும் – வெங்கல் ராவின் மேலும் ஒரு சோகமான பக்கம்

0
61
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ்,சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி தான் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் கிங்காக தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்தவர் வடிவேலு. ஹீரோவாகவும் சில படங்களில் நடித்த வடிவேலு, சில பிரச்சனைகளால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். வடிவேலு படங்களில் நடிக்காமல் போனதிலிருந்து அவருடன் நடித்த பல நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் தவித்து இருந்தார்கள். அந்த வகையில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தவர் நடிகர் வெங்கல் ராவ்.

-விளம்பரம்-

ஆந்திராவை சேர்ந்த இவர் சுமார் 25 வருடமாக ஃபைட் மாஸ்டராக இருந்தவர். பின்னர் இவர் உடல் ஒத்துழைக்காமல் நடிப்பு பக்கம் வந்து விட்டார். ‘நீ மட்டும்’ படம் இவர் முதல் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். குறிப்பாக இவர் வடிவேல் உடன் வரும் காட்சிகள் எல்லாம் வித்தியாசமாகவும், நம்மை சிரிக்க வைக்கம் வகையிலும் இருக்கும். தன்னுடைய உருவத்தாலும் நடிப்பாலும் தெலுங்கு கலந்து பேசும் தன்னுடைய பேச்சாலும் பிரபலமடைந்தார். மேலும், பல ஆண்டு காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெங்கல் ராவ், சமீபத்தில் உதவி கேட்டு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.

- Advertisement -

வெங்கட் ராவ் வீடியோ:

வீடியோவில் அவர், ‘வணக்கம் எனக்கு கை, கால் விழுந்திடுச்சு‌. நடக்க முடியல, பேச முடியல, சிகிச்சை எடுக்க ஹாஸ்பிடலுக்கு போக காசு இல்லை. மருந்து கூட வாங்க என்னால முடியவில்லை. சினிமா நடிகர்கள், சங்கங்கள் எனக்கு உதவி செய்யுங்க. உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். இதுக்கு மேல என்னால பேச முடியல என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர்கள் சிம்பு, வடிவேலு, ஐஸ்வர்யா ராஜேஷ், கே பி ஒய் பாலா உள்ளிட்டோர் வெங்கல் ராவுக்கு பண உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கல் ராவ் பேட்டி:

அதனைத் தொடர்ந்து, தற்போது சமூக வலைத்தளத்தில் வெங்கல் ராவ் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ‘சார் நான் பொறந்து வளர்ந்த ஊரு பிரதிபாடு. இங்க நானு எங்க அக்கா என் குடும்பம் எல்லாருமே கூலி வேலை செஞ்சோம். எங்க அப்பா சின்ன வயசுல இறந்துட்டாரு. நாங்க பள்ளிக்கூடம் போனதில்ல. ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கூலி வேலை செஞ்சோம். திடீர்னு ஒரு நாள் எனக்கு சினிமா ஆசை வந்துவிட்டது. அதனால மெட்ராசுக்கு போயிட்டு சினிமாவில் ட்ரை பண்ணலாம்னு நெனச்சேன்.

-விளம்பரம்-

சினிமாவில் வெங்கல் ராவ்:

அதே மாதிரி, மெட்ராசுக்கு போயிட்டு மொழி தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்புறம்தான் சினிமாவில் பைட்டிங் பண்ண எனக்கு சான்ஸ் கிடைத்தது. கொஞ்ச நாளைக்கு அப்புறம் என் முட்டி எல்லாம் தேஞ்சு போச்சு. அதனால பைட் பண்ண முடியாம காமெடி பக்கம் போயிட்டேன். அப்புறம் வடிவேல் அண்ணா கிட்ட போயிட்டு நான் ஃபைட் பண்ணல, காமெடிக்கு வரேன் என்று சொன்னேன். அதற்கு அவர் ‘சரி வா’ அப்படின்னு சொல்லிவிட்டார். அதுக்கப்புறம் தான் நான் காமெடிக்கு வந்தேன். எனக்கு 25 வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. 30 வயசுல தான் சினிமாவுக்கு வந்தேன்.

தனிப்பட்ட வாழ்க்கை

நான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிசா, பெங்காலி, இங்கிலீஷ், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் ஃபைட் பண்ணி இருக்கேன். எனக்கு அப்பெல்லாம் சம்பளம் வெறும் 250 ரூபாய், 300 ரூபாய் தான்.எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. பையன் சின்ன வயசுலயே உடம்பு சரியில்லாமல் இறந்து விட்டான். என் பொன்னையும் கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன். அவளும் சரியாக வாழவில்லை. எனக்காக சகிச்சுக்கிட்டு புருஷன் வீட்டிலேயே இப்ப வரைக்கும் இருக்கா. எனக்கு இப்போ பேரன் பேத்தின்னு ரெண்டு பேர் இருக்காங்க. எனக்கு அவங்க ரெண்டு பேர் தான் இப்போ எல்லாமே. எனக்கு உதவி செஞ்ச தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார் வெங்கல் ராவ்.

Advertisement