விஜியின் கோட் படத்தில் விஜயகாந்த் காட்சி தொடர்பாக வெங்கட் பிரபு கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ பட படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இதனால் தற்போது படத்திற்கான பிரமோஷன் பணிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பட ப்ரோமோஷன் விழாவில் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, மீனாட்சி, சினேகா, லைலா, பிரசாந்த் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.
வெங்கட் பிரபு பேட்டி:
அதன் பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோட் படக்குழுவினர் கலந்து இருந்தார்கள். அப்போது ஏ ஐ மூலம் விஜயகாந்த்தை பயன்படுத்தி இருப்பது குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு வெங்கட் பிரபு, ஏ ஐ தொழில்நுட்பத்தின் மூலம் தான் விஜயகாந்த்தை உருவாக்கி இருக்கிறோம். இதற்கு விஎஃப்எக்ஸ் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏ ஐ தொழில்நுட்பம் பெரிய விஷயம் கிடையாது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ள அவருடைய நிறைய டேட்டாக்களை இன்புட் செய்ய வேண்டும்.
https://www.youtube.com/watch?v=zmLIhM8Nn8E
விஜயகாந்த் குறித்து சொன்னது:
நடிகர் என்.டி.ஆரை திரும்பவும் காட்சிப்படுத்த வேண்டும் என்றால் அவருடைய முகத்தோற்றம் தொடர்பான அனைத்து டேட்டாக்களை இன்புட் செய்த பிறகு எந்த வயதில் வேண்டும் என்றாலுமே அதை உருவாக்கித் தரும். கேப்டன் பிரபாகரன் படம் விஜயகாந்த் உடைய டேட்டாக்களை தான் ஏ ஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். விஜய்க்கு டி ஏஜிங் செய்யும் போது அவருடைய அம்மாவிடம் இருந்து விஜய்யின் பழைய போட்டோக்களை வாங்கி டேட்டாவாக பயன்படுத்தி இருக்கிறோம்.
இளமையான விஜய் காட்சி:
இளமையாக விஜயை காண்பிக்க வேறு ஒரு பையனை நடிக்க வைத்தோம். அப்படித்தான் டிஏஜிங் மூலம் விஜய் உடைய லுக்கை வடிவமைத்தோம். இப்போது இருக்கும் காலகட்டத்தில் எல்லாமே சாத்தியம் தான். ஆனால், கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த கோட் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.

கோட் படம் குறித்த தகவல்:
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இதுவரை இந்த கோட் படத்தில் இருந்து 4 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், இந்த முறை இசை வெளியீட்டு விழா இல்லை. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது.






