தீபாவளிக்கு ரிலீஸ் ஆகு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் தான் கோடம்பாக்கம் முழுவதும் இப்போதைய ஹாட் டாபிக்.படம் வெற்றியைப் படைத்து வசூல் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இன்னொரு தரப்பு படத்தில் ‘இது நொட்ட, அது நொட்ட’ , ‘இது காப்பி அது காப்பி’ என ஒரு கூட்டமே புலம்பல் மோடில் உள்ளது.
அந்த கூட்டத்தில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவும் சேர்ந்துள்ளார். அவர் போட்ட ஒரு ட்வீட் தான் தற்போது விமர்சனத்தின் உச்சம்.அந்த டீவீட்டில், படத்தையும் தளபதியையும் பாராட்டி விட்டு ‘பஞ்சு சாருக்கு க்ரெடிட் எங்கே’ எனக் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: மெர்சலின் மெர்சலான சாதனைகள்.. லிஸ்ட் உள்ளே !
அதாவது அதன் அர்த்தம் என்னவென்றால் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை போல படம் உள்ளது, அந்த படத்தின் கதையாசிரியர் ‘பஞ்சு அருணாச்சலத்திற்கு’ க்ரெடிட் கொடுங்கள் என சூசகமாக படத்தை காப்பி என்று கூறியுள்ளார்.
ஆனால், நம்ம வெங்கட் பிரபுவின் படத்தை எடுத்துப் போட்டால் காப்பி என சொல்ல நிறைய படத்தை எடுத்துப் போடுவார்கள். என்னவாக இருந்தாலும் இது ஒரு ஆரோக்கியமன விமர்சனமாக இருப்பதால் பிரச்சனை எதுவும் இல்லை.