தெலுங்குல இதைத்தான் கேக்குறாங்க – கஸ்டடி படத்தின் தோல்வி குறித்த வெங்கட் பிரபு பேச்சால் சர்ச்சை.

0
2010
kasdadii
- Advertisement -

கஸ்டடி படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து வெங்கட் பிரபு அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கஸ்டடி. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
custody

இவர்களுடன் படத்தில் கீர்த்தி செட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சம்பத், பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் 90 காலகட்டத்தில் ஆந்திராவில் நடக்கும் கதை. ராஜமுந்திரியில் நடக்கும் வெடி விபத்தில் குழந்தைகள் உட்பட பலரும் கொல்லப்படுகிறார்கள். இந்த வழக்கு சிபிசிஐயிடம் ஒப்படைக்கப்படுகிறது.

- Advertisement -

இதில் ரவுடியாக அரவிந்த்சாமி இருக்கிறார். இவரை சிபிஐ அதிகாரி சம்பத் பிடிக்கிறார். அப்போது நடக்கும் கார் விபத்தில் இருவருமே போலீசில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்கின்றனர். பின் அரவிந்த் சாமியை காப்பாற்ற முதலமைச்சர் பிரியாமணி, போலீஸ் உயர் அதிகாரி சரத்குமார் உட்பட பலரும் முயற்சிக்கின்றார்கள். ஆனால், இவர்களை எதிர்த்து சம்பத்துடன் சேர்ந்து நாக சைதன்யா போராடுகிறார். பின் அரவிந்த்சாமியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த செல்கிறார். ஆனால், அரவிந்த் சாமியை காப்பாற்ற முயற்சி செய்தவர்களே அவரை கொல்ல முயற்சிக்கிறார்கள்.

இதன் பின்னணி என்ன?அரவிந்த் சுவாமி உடன் செல்லும் நாலு பேரின் நிலைமை என்ன? அரவிந்த் சுவாமியை நாக சைதன்யா காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கஸ்டடி படம் குறித்து வெங்கட் பிரபு அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெங்கட் பிரபு கலந்திருந்தார். அதில் அவர், நான் சீரியஸாக படம் எடுத்தால் ஓடவே மாட்டேங்குது.

-விளம்பரம்-

வெற்றிமாறன் சார் மாதிரி படம் எடுக்கணும் நினைத்தால் ஸ்லோவாக இருக்கு என்று சொல்றாங்க. ஒருவரிடம் இருந்தும் ஒவ்வொன்னு எதிர்பார்க்கிறார்கள். என்னிடம் இருந்து என்டர்டைன்மென்ட் தான் எதிர்பார்க்கிறார்கள். மங்காத்தா காமெடி படம் இல்லை. அது ஒரு ஹெயிஸ்ட் ஜானர் படம். அது சீரியசான படம் தான். அதில் நான் என்டர்டைன்மென்ட் சேர்ந்து கொண்டேன். மாநாடு படத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனையை பற்றி பேசினேன். அதில் அப்துல் காதர் என்கிற ஒருவர் டைம் லூப்பில் மாட்டிக் கொண்டு சொல்லும் கதையை என்டர்டைன்மெண்டாக சொன்னோம்.

தற்போது கஸ்டடி என்ற ஒரு படம் பண்ணினேன். முதல்முறையாக தெலுங்கில் பண்ணின். வேறு மாதிரி படம் பண்ணலாம் என்று நினைத்தேன். சீரியஸாக அந்த படம் பண்ணினேன். தெலுங்கில் எமோஷனல் கேட்கிறார்கள். எல்லாமே பாடம் தான். சினிமாவைப் பொறுத்தவரை எனக்கு எல்லாமே தெரியும் என யாராலும் சொல்ல முடியாது. கடைசி வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இப்படி வெங்கட் பிரபு கூறியதன் மூலம் கஷ்டடி படத்தின் தோல்விக்கு காரணம் எமோஷனல் காட்சிகள் எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் கொடுத்த அழுத்தமா ?என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதனை அடுத்து வெங்கட் பிரபு அவர்கள் விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை இயக்க இருக்கிறார். தற்போது இதற்கான அறிவுப்புகள் வெளியாகி இருக்கிறது.

Advertisement