பிரபல டபுள் மீனிங் காமெடி மன்னன் வெண்ணிற ஆடை மூர்த்தி என்னவானார். அவரின் தற்போதைய நிலை.

0
34664
vennira-aadai-moorthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ‘வெண்ணிறாடை மூர்த்தி’. அதோடு வெண்ணிறாடை மூர்த்திக்கு தற்போது 81 வயது ஆகிவிட்டதா?? மேலும்,இவர் இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பதை பற்றி பார்க்கலாம் வெண்ணிற ஆடை மூர்த்தி நடிகர், வக்கீல்,கதாசிரியர்,சின்னத்திரை இயக்குனர், ஜோசியர் எனப் பல முகங்களைக் கொண்டவர். இவர் 1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி சிதம்பரத்தில் பிறந்தவர். அதுமட்டும் இல்லாமல் சினிமா உலகில் நகைச் சுவையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் வெண்ணிறாடை மூர்த்தி. மேலும், இவர் சினிமாவில் பல்வேறு திரைப் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர் மூர்த்தி.

-விளம்பரம்-
Image result for vennira aadai murthy"

- Advertisement -

இந்த படத்திற்கு பிறகு தான் இவரை அனைவரும் ‘வெண்ணிறாடை மூர்த்தி’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். சமீபத்தில் இவர் 81 வது பிறந்த நாளை தன்னுடைய குடும்பத்துடன் சந்தோசமாக கொண்டாடி உள்ளார். மேலும், வெண்ணிற ஆடை மூர்த்திக்கு 81 வயதா!!! என்று எல்லோரும் பிரமித்துப் போய் விட்டார்கள். மேலும், தன்னுடைய வெண்ணிற ஆடை மூர்த்தி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று விஜய், அஜித் காலம் வரை அதாவது மூன்று தலைமுறைக்கும் மேலாக சினிமா உலகில் சிறந்த காமெடி நடிகராக விளங்கி வருகிறார்.

இதையும் பாருங்க : ஜீவா பட நடிகருக்கு திருமணம் முடிந்தது. திருமண புகைப்படங்கள் இதோ.

மேலும், இவர் தன்னுடைய உடல் வித்தியாசமான பாவனைகளாலும், இரட்டை மொழி வசனங்களாலும், வித்தியாசமான குரலினாலும் மக்கள் மத்தியில் இன்று வரை பிரபலமாக உள்ளார். இவர் சினிமா உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேல் நடித்துள்ள நடிகை மணிமாலாவை திருமணம் செய்து கொண்டார்.இவர் 1965 ஆம் ஆண்டு படப்பிடிப்பில் தான் நடிகை மணிமாலாவை பார்த்தார். பின் இருவரும் முதலில் நட்புடன் பழகி வந்தார்கள். சில காலங்களில் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். பின் இவர்கள் இருவரும் 1970 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-
Actor-venniradai

moorthy

இவர் சினிமா உலகில் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். தற்போது இரண்டு வருடங்களாக இவருடைய உடல் நிலை நடிப்பதற்கு ஒத்துப் போகாத காரணத்தினால் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார். இவர்களுக்கு மனோ என்ற ஒரு மகனும் உள்ளார். இவர் என்ஜீனியரிங் முடித்து அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் பணி செய்கிறார். இவருக்கும் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். நம்ம வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஒரு பேரன் உள்ளார். மேலும்,ரசிகர்கள்,பிரபலங்கள் எல்லோரும் 100 ஆண்டுகளுக்கு மேல் நலமாக இருக்க வேண்டும் என்று வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement