சிம்பு-சந்தானம் கூட்டணியில் உருவாகும் படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டதாக கூறப்படும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார்.

சமீப காலமாக இவர் தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சிம்பு-கமல் நடித்த படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கமல் உடன் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து சிம்பு தன்னுடைய அடுத்த அடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார்.
சிம்பு திரைப்பயணம்:
அந்த வகையில் சிம்பு அவர்கள் ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்கிறார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படம் காலேஜ் பின்னணியில் gen z கொண்டாடும் வகையில் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு கல்லூரி மாணவராக நடிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக இந்த படத்தில் கயாடு நடிக்கிறார். மேலும், ஹீரோவாக கலக்கும் சந்தானம் சிம்புவுடன் இந்த படத்தில் இணைந்திருப்பது பலருக்குமே ஆச்சரியம்தான்.

சிம்பு 49:
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஜூன் இரண்டாம் வாரத்தில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் சிம்புவின் 49 வது படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, திடீரென்று எஸ்டிஆர் 49படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாகத்துறை சோதனை செய்திருக்கிறார்கள். அதோடு படக்குழுவினருடன் சிம்புக்கு மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது.
இயக்குனர் மாற்றம்:
காரணம், சந்தானம் இந்த படத்தில் நடிக்க இருப்பதால் தனக்கு நிகரான கதாபாத்திரம் இருக்க வேண்டும் என பல கண்டிஷன்களை சிம்பு இயக்குனருக்கு போட்டு இருக்கிறார். இதனால் இயக்குனரும் முடியாது என்று சொன்னாராம். அதுமட்டுமில்லாமல் ராம்குமார் கொடுத்த பைனல் ஸ்கிரிப்டில் சிம்புவுக்கு திருப்தி இல்லையாம். இப்படி அடுத்தடுத்து இந்த படம் தொடர்பாக பல சிக்கல்கள் வந்திருப்பதால் சிம்பு இயக்குனரை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் ராம்குமார் வேறொரு நடிகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம்.

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி:
அதேபோல் சிம்பு அவர்கள் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அஸ்வந்த் மாரிமுத்துடன் ஒரு படம் என்று பிசியாக இருக்கிறார். தற்போது சிம்புவின் 49-வது படத்தை வெற்றிமாறன் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது வடசென்னையில் நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. கென் கருணாஸுக்காக எழுதிய ராஜன் வகையறா என்ற கதையைத்தான் தற்போது சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கி இருக்கிறாராம். இந்த படத்தில் கவின், இயக்குனர் நெல்சன், ஆண்ட்ரியா, சமுத்திரகனி என பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.






