வனவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வெற்றிமாறன் படக்குழு – எச்சரிக்கையாக என்னென்ன செஞ்சி இருக்காங்க பாருங்க

0
271
- Advertisement -

வனவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொண்டு வெற்றிமாறனின் விடுதலை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆரம்பத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக வெற்றிமாறன் இருந்தார். அதற்கு பின் தான் வெற்றி மாறன் இயக்குனராக சினிமா உலகில் களம் இறங்கினார்.

-விளம்பரம்-
Asuran Director Vetrimaran Wife Shares About Their Love Story

இவர் முதன் முதலாக பொல்லாதவன் என்ற படத்தை தான் இயக்கி இருந்தார். அதன் பிறகு பெரும்பாலும் வெற்றிமாறன்– தனுஷ் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு. மேலும், இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்று இருந்தது. கடந்த ஆண்டு தான் டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விழாவில் தனுஷும், வெற்றிமாறனும் அசுரன் படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தார்கள்.

இதையும் பாருங்க : டான் படத்தில் வந்த இந்த காமெடி கோபி சுதாகரின் காமெடியா ? ரெண்டும் ஒரே மாதிரி தான் இருக்கே. இதோ வீடியோ.

- Advertisement -

விடுதலை படம் பற்றிய தகவல்:

இது குறித்து வெற்றிமாறனை அனைவரும் பாராட்டி இருந்தார்கள். தற்போது வெற்றிமாறன் அவர்கள் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் தான் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டு வருவதால் கொஞ்சம் தாமதமாகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.

விடுதலை படத்தின் படப்பிடிப்பு:

மேலும், விடுதலை படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக காமெடி கதாபாத்திரங்களுக்கு பெயர்போன சூரி இந்த படத்தில் சீரியஸான போலீஸாக நடிக்கிறார். அதுமட்டும் இல்லாமல் விஜய் சேதுபதி இந்த படத்தில் இடம் பெற்றதால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. முதன்முறையாக விஜய் சேதுபதி- வெற்றிமாறன் இந்த படத்தில் இணைந்துள்ளனர். தற்போது திண்டுக்கல் அருகே சிறுமலையில் கிராம செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள் தங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 50 நாட்களுக்கு தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பு நடத்த ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

வனவிலங்குகளின் தாக்குதல்:

மேலும், படப்பிடிப்பின்போது விஷப்பாம்புகள், காட்டு மாடுகள், காட்டு நாய், அட்டைப் பூச்சிகளின் தாக்குதலை படக்குழுவினர் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. படத்தின் சண்டைக்காட்சியில் விஜய் சேதுபதி டூப் போடாமல் நடித்து கொடுத்ததாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். சூரி படத்தை முடித்தவுடன் தான் சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்தப் படம் ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவி எடுக்கப்படும் படமாகும். ‘அசுரன்’ படத்தைத் தயாரித்த தாணுவே இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கும் படங்கள்:

ஜல்லிக்கட்டு கதைகளைக் கொண்ட படமாக வாடிவாசல் இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் வெற்றி பெற்ற வட சென்னை படத்தின் இரண்டாவது பாகத்தையும் வெற்றிமாறன் எடுக்க உள்ளதாகக் தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் விஜயை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி வெற்றிமாறன் அவர்கள் விஜய், கமல், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் பெரிய நடிகர்களின் படங்களை இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Advertisement