டான் படத்தில் வந்த இந்த காமெடி கோபி சுதாகரின் காமெடியா ? ரெண்டும் ஒரே மாதிரி தான் இருக்கே. இதோ வீடியோ.

0
421
don
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சில வாரங்களுக்கு முன் தான் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயன் எதையாவது சாதிக்க வேண்டும் முயற்சியில் இருக்கிறார். அப்போது கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ் ஜே சூர்யாவிற்கும் ஆசிரியராக இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

இதையும் பாருங்க : மரியாதை ரொம்பவே முக்கியம் – சினிமாவில் வாய்ப்பு வந்தும் நடிக்க மறுக்க காரணம் இதான் – வாரணம் ஆயிரம் சூர்யா தங்கை தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

டான் படத்தின் கதை:

இறுதியில் ஆசிரியராக இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? சாதித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. படம் குறித்து பிரபலங்கள் பலரும் நல்ல நல்லவிமர்சனத்தை கொடுத்து இருக்கிறார்கள். இந்நிலையில் டான் படத்தின் ஒரு காட்சி வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அது என்னவென்றால், சிவகார்த்திகேயன் கல்லூரியில் சேட்டை செய்ததற்காக அவரின் அப்பாவை அழைத்து வர சொல்லி இருப்பார்கள்.

டான் பட காட்சி வீடியோ:

ஆனால், சமுத்திரகனிக்கு பதிலாக சூரியை தன் அப்பாவை போல வேஷமிட்டு சிவகார்த்திகேயன் அழைத்து செல்வார். அந்த காட்சியில் சூரி மற்றும் இருவரும் புரியாத ஒரு பாஷையில் பேசி நடித்து இருப்பார்கள். அந்த காட்சி ரசிகர்களின் சிரிப்பலையில் மிகவும் ரசிக்கப்பட்டது. ஆனால், அந்த காட்சி பரிதாபங்கள் கோபி சுதாகர் நடித்த ஒரு வீடியோவில் இடம்பெற்றது போல இருக்கிறது. தற்போது ஒரே மாதிரி இருக்கும் கோபி சுதாகர் வீடியோவையும், டான் படத்தின் வீடியோவையும் நெட்டிசன்கள் வைரலாகி வருகிறார்கள்.

-விளம்பரம்-

சிவா நடித்து முடித்த படங்கள்:

ஏற்கனவே டான் திரைப்படம் mic set ஸ்ரீராம் நடித்த யூடுயூப் வீடியோ போல இருக்கிறது என்று கூறி வருகின்றனர். மேலும், சிவகார்த்திகேயன் அவர்கள் டான் படத்தை தொடர்ந்து அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவிக்குமார் படத்தில் அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சிவா நடிக்கும் படங்கள்:

அதேபோல் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் உருவாகி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். பின் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவா நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான புகைப்படம் எல்லாம் வெளியாகி இருக்கிறது.

Advertisement