என் படத்த நானே பாக்க மாட்டேன், டிவில பாட்டு போட்டா கூட வெளிய ஓடிடுவேன் – வெற்றிமாறன் சொன்ன காரணம்.

0
458
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார்.விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். கடந்த 31ஆம் தேதி வெளியான இப்படம் ரசிங்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

வெற்றிமாறன் பேட்டி :

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய படங்களில் வரும் காமெடி காட்சிகளை பற்றி பேசியிருந்தார். அவர் கூறுகையில் “பொல்லாதவன் படத்தில் வரும் காட்சிகள் கேவலமாகத்தான் இருக்கும். நான் இதுவரையில் படம் வெளியான பிறகு என்னுடைய படங்களை பார்ப்பதில்லை, டிவியில் பாடல் வந்தால் கூட உடனே மாற்றிவிடுவேன். அதற்கு காரணம் நான் அந்த காட்சிகளை பார்த்துவிட்டு இதனை இன்னமும் நன்றாக எடுத்திருக்கலாமோ என்று மனஉளைச்சல் ஆகிவிடும். அதனால் ஏன்னுடைய படங்களை பார்ப்பதை தவிர்த்து விடுவேன்.

சந்தானம் வர கதிரேசன் தான் காரணம் :

பொல்லாதவன் படத்தில் அந்த கதாபாத்திரம் வரும் போது நடிகர் கருணாஸ் நடிக்கும் “குமார்” என்ற கதாபாத்திரம் மட்டும் தான் படத்தில் இருந்தது. அப்போது தயாரிப்பாளர் கதிரேசன் கூறினார் சந்தானம் உச்சத்தில் இருக்கிறார் அவரை வைத்து பண்ணலாம் என்று. சரி என்று சந்தானம் வந்த பிறகு படத்தின் நிலைமையை கூறினேன், அதாவது உங்களுக்கு கதாபாத்திரம் கிடையாது. எனவே நான் காட்சிகளை கொடுக்கிறேன் அதற்கு தகுந்தாற் போல பண்ணுங்கள் என்றேன்.

-விளம்பரம்-

காமெடி காட்சிகள் எடுக்காததற்க்காக காரணம் :

ஷூட்டிங் வந்ததும் சந்தனமும், கருணாஸ் அவர்களும் கலந்து பேசி நடித்து காட்டுவார்கள், அப்படி எடுக்கப்பட்ட காட்சிகள் தான் அந்த துணி துவைக்கும் காட்சிகளும், ஐட்டம் பாடலும். முதல் படம் என்பதினால் தப்பித்து விட வேண்டும் என்று நோக்கத்திலேயே செய்த படம் எனவே அதனை தவிர்க்க முடியவில்லை. பொதுவாகவே எனக்கு தனியாக காமெடி காட்சிகளை எடுப்பதில் பயம் இருக்கிறது. அதோ போல அந்த மாதிரியான காட்சிகளை நான் எடுக்கும் போது எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாது. அந்த காரணத்தினாலேயே அதனை நான் தவிர்த்து விடுவேன்.

மற்ற படங்களில் இருந்தது :

அதற்கு காரணம் கதைக்குலேயே அந்த காமெடி கதாபாத்திரம் வந்தால் சரியாக இருக்கும் அதனை தவிர்த்து வெளியில் இருந்து வந்தால் தான் என்னை பண்ணமுடியாது. ஆடுகளம் படத்தில் கதைக்கு பொறுப்பு இல்லாமல் இருக்கும் ஒரு கதாபாத்திரம் தேவைப்பட்டது. வடசென்னை படத்திலும் அதே போன்ற ஒரு கதாபாத்திரம் தான் வந்தது. ஆனால் நான் எடுத்த மற்ற படங்களில் அந்த மாதிரியான கதாபத்திரம் கிடைக்கவில்லை என்று கூறினார் இயக்குனர் வெற்றிமாறன்.

Advertisement