அசுரன் பட சர்ச்சை – சீமான் பொய் சொன்னாரா? வெற்றிமாறன்கூறிய உண்மை. இதோ வீடியோ.

0
325
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் தற்போது இயக்கியுள்ள படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலம் தான் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். மேலும், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படம் உருவாகிறது.

-விளம்பரம்-

- Advertisement -

அதோடு இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலர் வெளியானது அடுத்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். அதில் வெற்றிமாறன் நல்லஇயக்குனர் என்றும் 1500 படங்களுக்கு இசையமைத்த பின்னர் இதனை தான் கூறுவதாகவும் இளையராஜா தெரிவித்தார்.

சீமானை கலாய்த்த விஷன் :

இந்நிலையில் தான் இயக்குனர் வெற்றிமாறன் பேசிய ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஊடகவியலாளர் விஷன் என்பவர் தன்னுடைய வாழ்க்கை அனுபவம் குறித்தும், அரசியல் தலைவர்களுடன் உரையாடல் குறித்தும் பேசி இருந்தார். அப்போது அதில் அவர் சீமானின் பெயரை குறிப்பிடாமல் இந்த பாடல் குறித்து கூறியிருந்தது, மைக் எடுத்தால் பொய் பேசுவது ஒன்று, வாழ்க்கையே பொய்யாக உள்ளது. எள்ளு வயப் பூக்களையே பாடலின் மெட்டு என்னுடைய தான். நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளேன்.

-விளம்பரம்-

என்னுடைய நாட்டுப்புற பாடலை தழுவி தான் “எள்ளு வயப் பூக்களையே” பாடலின் மெட்டு அமைக்கப்பட்டது. வெற்றிமாறன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இதற்கு கிரெடிட் தருகிறேன் என்று சொன்னார்கள். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னிடம் அந்த தலைவர் பகிர்ந்து கொண்டார் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து தற்போது “அசுரன்” படத்தை இயக்கிய வெற்றிமாறன் இந்த விஷயம் குறித்து பேசிய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது.

அசுரன் பாடல் பற்றி வெற்றிமாறன் :

அந்த வீடியோ பதிவில் வெற்றிமாறன் கூறுகையில் “அசுரன்” படத்தில் வரும் பாடல்கள் குறித்து நானும் ஜி.வி.பிரகாஷும் யோசித்து கொண்டே இருந்தோம். இந்த காட்சிக்கு இப்படி இசையமைக்கலாம், நாட்டுப்புற பாடலில் இந்த பாடலுக்கு இப்படி மெட்டு போடலாம் என்று. இளையராஜா தோணியில் இருக்க வேண்டும் அதுதான் எனக்கு பிடிக்கும். அப்போதுதான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கல்லூரி விழா ஒன்றில் படியா பாடல் ஒன்றை நான் பார்த்தேன்.

சீமானின் பாடல் தான்:

உடனே அதனை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷுக்கு அனுப்பி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். ஜி.வி அருமையாக இருக்கிறது என்று கூறினார். பின்னர் நானும் ஜி.வியும் சீமானை சந்தித்தோம். அவர் அந்த பாடல் என் பாட்டி பாடியதுதான் என்று கூறினார். அதோடு பாடலை பாடியும் பதிவு செய்து கொடுத்தார். அந்த பாடலை வைத்துதான் ஜி.வி.பிரகாஷ் “எள்ளு வயப் பூக்களையே” பாடலை உருவாக்கினார் என்று அந்த பேட்டியில் கூறினார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த வீடியோ தற்போது வைரலாகி விஷனை நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

Advertisement