நடிகர் மயில்சாமியின் மறைவு குறித்து அவருடைய சம்மந்தியும், துணை சபாநாயகருமான பிச்சாண்டி அவர்கள் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் மயில்சாமி. இவர் நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர். இவர் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னிராசி படத்தில் டெலிவரி பாய் என்ற வேடத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆர் ஜே பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற படத்தில் மயில்சாமி நடித்திருந்தார். அதன் பின் சமீப இவரை அதிக படங்களில் காண முடியவில்லை.
மயில்சாமி திரைப்பயணம்:
மேலும், நடிகராக மட்டுமில்லாமல் இவர் தீவிர அரசியல்வாதியும் ஆவர். ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பு வரை அ.தி.மு.க-வில் இருந்ததார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.கவிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார். பின் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது.
மயில்சாமி மரணம்:
இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால், அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மயில்சாமி தீவிர சிவ பக்தர். ஆகவே, இவர் சிவராத்திரி தினத்தில் சிவனடி சேர்ந்து இருந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி தந்தது. மயில்சாமி மறைவை அடுத்து திரைபிரபலங்கள் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.
மயில்சாமி மகன் திருமணம்:
இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் மயில்சாமியின் மகன் அருமை நாயகத்துக்கும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்திருந்தது. இந்த திருமண விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின், ரஜினிகாந்த், இயக்குனர் சங்கர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் பிச்சாண்டியின் மகளை தான் மயில்சாமி மகன் திருமணம் செய்திருக்கிறார் என்பதே அவருடைய மறைவிற்கு பின்பு தான் பலருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் பிச்சாண்டி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய சம்பந்தி மயில்சாமி ரொம்ப தங்கமான மனிதர்.
பிச்சாண்டி அளித்த பேட்டி:
மகளை கொடுத்து நல்ல உறவினராகி விட்டோம் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. உண்மையிலேயே அவர் நல்ல மனம் படைத்தவர். அதிக கடவுள் பக்தி கொண்டவர். நாங்கள் சம்மதி ஆவதற்கு முன்பே அவரை எனக்கு நன்றாக தெரியும். என் மகளை அவரது வீட்டிற்கு அனுப்புவதற்கு முன்பு அவர் என்னிடம் எப்படி நடந்து கொண்டாரோ, அதேபோல் தான் திருமணத்திற்கு பின்பும் எங்களிடம் நடந்து கொள்கிறார். எப்போதும் அவர் ஒரே மாதிரியான அன்பை தான் செலுத்தி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய சம்பந்தி என்பதை அவர் எங்கும் காட்டிக்கொள்ளவில்லை. அவரே சினிமாவில் பெரிய நடிகராக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர், பக்தர் என்றே சொல்லலாம். அவருடைய இழப்பு எங்கள் குடும்பத்திற்கே பெரிய இழப்பு என்று மன வேதனை உடன் கூறியிருந்தார்.