குடி போதையில் கார் ஓட்டிய லாரன்ஸ் மேலாளர் – கார் மோதியதில் அசுரன் பட நடிகர் சம்பவ இடத்திலேயே மரணம் – தவிக்கும் 2 வயது குழந்தை மற்றும் மனைவி

0
2295
Saranraj
- Advertisement -

ராகவா லாரன்ஸின் அலுவலக மேலாளர் கார் மோதி வெற்றிமாறனின் துணை நடிகர் சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கிறது. மேலும், இவரிடம் பல பேர் துணை இயக்குனர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் ஒருவர் தான் சரண்ராஜ். இவர் மதுரவாயில் தனலட்சுமி தெருவை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 26 வயது தான் ஆகிறது. இவர் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியது மட்டும் இல்லாமல் துணை நடிகராகவும் படங்களில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு 11:30 மணி அளவில் இவர் கே கே ஆர் நகர் ஆற்காடு சாலை அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

- Advertisement -

துணை நடிகர் இறப்பு:

அப்போது அவருடைய வாகனத்திற்கு பின்னால் வேகமாக வந்த கார் சரண்ராஜின் பைக்கின் மீது மோதி இருக்கிறது. மோதியவுடன் நடிகர் சரண்ராஜ் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். இந்த கோர விபத்தில் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அநியாயமாக உயிரிழந்திருக்கிறார். மேலும், இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். போலீசும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரண்ராஜின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

போலீசார் வழக்கு பதிவு:

இதனை எடுத்து போலீசார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், விபத்தை ஏற்படுத்திய நபரையும் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடந்தி வருகிறது. விசாரணையில் அந்த நபர் சாலிகிராமம் எம்சி அவன்யூ பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவரும் தமிழ் சினிமா உலகில் துணை நடிகராக இருக்கிறார். அதோடு இறந்த நடிகர் சரண்ராஜ், பழனியப்பன் இருவருமே நண்பர்கள் என்பது விசாரணையில் தெரியப்படுகிறது.

-விளம்பரம்-

விபத்து செய்தவர் குறித்த விவரம்:

பழனியப்பன் குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்று அதிக போதையில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்று முதற்கட்ட விசாரணையில் வெளியாகியிருக்கிறது. மேலும், போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த பழனியப்பன் ஒரு கட்டத்தில் கார் முன் சென்று கொண்டிருந்த சரண்ராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறார். இது அங்கு இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிய வந்திருக்கிறது. தற்போது சாலை விபத்தில் துணை இயக்குனரும் நடிகருமான சரண்ராஜ் இறந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement