இவருக்கு எதுக்கு ‘கனவு இல்லம்’ ? வைரமுத்துவிற்கு சொந்தமாக இருக்கும் வீடுகள் குறித்து ஆதாரத்தை பதிவிட்டு பிரபலம் கேள்வி.

0
1538
- Advertisement -

வைரமுத்துவின் கனவு இல்லம் குறித்து youtuber சவுக்கு சங்கர் விமர்சித்து பேசி இருக்கும் ட்விட்டர் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில், தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கிய பங்களிப்புக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற விருதுகள், சாகித்ய அகாடமி விருது, கலைஞர் செம்மொழி விருது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு விருதை பெற்றவர்களுக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் அவர்கள் விரும்பிய இடத்தில் வீடு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனை அடுத்து இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு எழுத்தாளர்கள் ஈரோடு தமிழன்பன், புவியரசு, சுந்தரமூர்த்தி, பூமணி, மோகராசு, இமயம் ஆகிய 6 பேருக்கும் அவர்கள் விருப்பத்துக்கேற்ப சென்னை, கோவையில் வீடுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

- Advertisement -

வைரமுத்து கனவு இல்லம்:

மேலும், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சிலர் ஆதரவு கொடுத்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த அறிவிப்பு குறித்து பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்து டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், வைரமுத்து வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு? 2006ல் சம்பாதித்தது கொஞ்ச நஞ்சம் அல்ல. பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு 5 லட்சம் வாங்குன பெரிய மனுசன்.

சவுக்கு சங்கர் டீவ்ட்:

அந்த படமே அரசு மானியதுத்துல எடுத்தது தான். இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா? வைரமுத்துக்கு சொந்தமாக சென்னை பெசன்ட் நகர், திருவான்மியூரில் உள்ள 3 வீடுகள் இருக்கிறது. கவிஞருக்கு இந்த மூணு வீடு போதாதா? கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்களுக்கு? யார் அப்பா வீட்டு பணம்? என்று கொந்தளிப்பில் கூறி இருக்கிறார். இப்படி வைரமுத்துவை சவுக்கு சங்கர் விளாசி பேசி இருக்கும் பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

வைரமுத்து குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

வைரமுத்து குறித்த சர்ச்சை:

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு இணையத்தில் வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தும் வைரமுத்து தன் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

Advertisement