நெட்பிலிக்ஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி படம் நீக்கப்பட்டது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்து இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்துடன் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. நயன் படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
https://twitter.com/sumone_me/status/1745680114183270732
இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார். படத்தில் நடிகை நயன்தாரா பிராமண குடும்ப பெண்ணாக நடித்து இருக்கிறார். இவர் திருச்சியை சேர்ந்தவர். இவருக்கு சின்ன வயதில் இருந்தே உணவை ருசி பார்ப்பதில் நிறைய திறமை இருக்கும். அதோடு இவரிடம் சமைத்து ருசி பார்க்க சொல்வார்கள். இதனால் இவருக்கு சமையல் மீது அதிக ஆர்வம் வந்துவிடும். மேலும், கோயிலில் இவருடைய தந்தை பிரசாதம் சமைப்பவர். இதனால் இவருக்கு அசைவம் பிடிக்காது.
படம் குறித்த தகவல்:
பின் நயன்தாரா தன்னுடைய கல்லூரியில் சமையல் கலை நிபுணராக சேர்ந்து கல்வி பயில்கிறார். இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த சமையல்கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன்னுடைய குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தன்னுடைய லட்சியத்தை நயன்தாரா அடைந்தாரா? இல்லையா? அவர் எதிர்கொண்ட சிக்கல்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை. இது நயன்தாராவின் 75வது படமாகும்.
https://twitter.com/sekartweets/status/1746914279436263468
அன்னபூரணி படத்தின் மீது புகார்:
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படம் netflix தளத்திலும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் விதமாக இருப்பதாகவும் மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த படம் NETFLIX தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
வெற்றிமாறன் கருத்து :
இந்நிலையில் அன்னபூரணி படம் Netflixல் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடி தளங்களுக்கும் பொருந்தும். ஆனால் தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை பிற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது.

ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தணிக்கை குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பதிவிட்ட மரியான் பட நடிகை பார்வதி “ஒரு ஆபத்தான முன்னுதாரணம் அமைக்கப்படுகிறது” என குறிப்பிட்டு தணிக்கை செய்வது குறித்து விமர்சித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






