மேடையில் ஏட்டிக்கு போட்டியாக பேசிய வெற்றிமாறன் VS பேரரசு. ராஜராஜ சோழன் பஞ்சாயத்து எதிரொலியா?

0
388
- Advertisement -

இயக்குனர் பேரரசுக்கு எதிராக வெற்றிமாறன் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். இவர் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைத்து இருக்கிறார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. பின் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர், ஜெயில், செல்பி, அடியே போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

- Advertisement -

ஜிவி பிரகாஷ்:

இப்படி சமீப காலமாகவே ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும், ஜிவி பிரகாஷ் தொடர்ந்து படங்களின் கதைகளில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிருக்கும் படம் ரெபல். இந்த படத்தை இயக்குனர் நிகேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஜி. பிரகாஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

கள்வன் படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதை எடுத்து தற்போது ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கள்வன். இந்த படத்தை பி வி சங்கர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் இவானா, பாரதிராஜா, தீனா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷை இசையமைத்திருக்கிறார். இந்த படம் வரும் ஏப்ரல் நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் மட்டும் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்புதான் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் இயக்குனர் பேரரசு- வெற்றிமாறன் பேசிய கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

இயக்குனர் பேரரசு சொன்னது:

நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு, இந்த படம் யானையை மையமாக வைத்து எடுத்து இருக்கிறார்கள். யானைகளை மையமாக வைத்து எம்ஜிஆர் நடித்த நல்ல நாள், ரஜினி நடித்த அன்னை ஒரு ஆலயம், சமீபத்தில் கும்கி போன்ற படங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் எப்போதும் யானை ராசி தான். யானை என்பது பிள்ளையார். இந்தப் படங்களைப் போல கள்வன் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறுகிறார்.

வெற்றிமாறன் கருத்து:

இவரைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், விடுதலை படத்தில் இயக்குனர் பாரதிராஜாவை நடிக்க வைக்க யோசித்தோம். ஆனால், அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்ததால் அவருடைய உடல்நிலை கருதி வேண்டாம் என்று முடிவு செய்தோம். மேலும், நான் இதை சொன்னால் சர்ச்சை ஆகும். இருந்தாலும், சொல்கிறேன் பரவாயில்லை. நீங்கள் யானையை வைத்து படம் எடுத்தாலும், டைனோசரை வைத்து படம் எடுத்தாலும் கதை, திரைக்கதை நன்றாக இருந்தால் மட்டுமே ஒரு படம் ஓடும் என்று பேரரசு பேசியதற்கு எதிராக வெற்றிமாறன் கூறி இருக்கிறார். தற்போது இது தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement