ரஜினி நடிக்கும் 170 படத்தின் டைட்டில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக ஹிட் படத்தை கொடுக்க போராடி வருகிறார். அந்த வகையில் ஜெயிலர் படத்திற்கு முன்னர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.
https://twitter.com/koshi_twits/status/1734548046887989643
அதிலும் தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும்கேலிக்கு உள்ளானது. இதனால் ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற ஒத்மையாக இருந்த ரஜினி இளம் இயக்குனர்களுடன் கைகோர்க்க தயாரானார் அந்த வகையில் இறுதியாக இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷராப், சிவராஜ்குமார், விநாயகம் என்று பலர் நடித்து இருந்தனர்.
இதனால் இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பேன் இந்தியா அளவில் வெற்றியை கண்டது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போவது என்ற மிகப்பெரிய கேள்வி சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகவே இருந்தது. ரஜினியின் 170வது படத்தை லோகேஷ் கனகராஜ் இணைவதாகவும் தகவல்கள் அடிபட்டன. ஆனால், ரஜினி 170வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
https://twitter.com/RedRaj62409222/status/1734552797658681556
இந்த படத்தின் அறிவிப்பு கடந்த மார்ச் மாதமே வெளியாகி இருந்தது. இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது.
இப்படி ஒரு நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'வேட்டையன்' என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் இந்த 'வேட்டையன்' என்பது குறிப்பிடதக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டீசரில் மீண்டும் கழுகு பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறது.
https://twitter.com/SelvaPr007/status/1734549505700401323
இந்த படத்தின் டீசரின் பின்னணியில் கழுகு சத்தம் கேட்கிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு, காக்கா கதை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய்யின் பேச்சு இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தது. இப்படி ஒரு நிலையில் மீண்டும் இந்த படத்தின் டீசரில் கழுகு bgm மூலம் புதிய பஞ்சாயத்து கிளப்பி இருக்கிறது.





