‘டீன்ஸ்’ பட விவகாரம் தொடர்பாக கிராபிக்ஸ் நிறுவனர் சிவபிரசாத் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலம் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். கடந்த சில நாட்களாக பார்த்திபன் பட விவகாரம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பார்த்திபன் இயக்கி நடித்து இருக்கும் ‘டீன்ஸ்’ படத்தை பயாஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருகிறார் இயக்குனர். இந்த படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பார்த்திபன் கொடுத்திருக்கும் புகர் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, கோவை தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் சிவபிரசாத். இவர் டீன்ஸ் படத்திற்காக விஎப்எக்ஸ் காட்சிகளை உருவாக்கி தருவதற்கு 68.5 லட்சம் பேசப்பட்டு இருந்தது.
பார்த்திபன் புகார்:
இதற்கான முன் பணமாக 42 லட்சம் ரூபாயை பார்த்திபன் கொடுத்திருக்கிறார். ஏப்ரல் மாதமே முடித்து கொடுப்பதாக சிவபிரசாத் கூறியிருந்தார். ஆனால், சிவபிரசாத் முடித்து தராமல் தாமதம் செய்ததால் பார்த்திபனும் பணத்தை தரவில்லை. இதை அடுத்து மீண்டும் 88.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மெயில் மூலம் சிவபிரசாத் கூறியிருக்கிறார். இதனால் கடுப்பான நடிகர் பார்த்திபன் போலீசில் கிராபிக்ஸ் நிறுவனர் சிவபிரசாத் மீது புகார் கொடுத்திருக்கிறார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சிவபிரசாத் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர், ஆரம்பத்தில் நான் இவ்வளவு பணம் ஆகும் என்று சொல்லும்போதே எத்தனை ஷாட்டுக்கு வேலை பார்க்கப் போகிறோம் என்று முடிவு செய்யவில்லை.
சிவபிரசாத் விளக்கம்:
அதனால் இத்தனை பிரேம்க்கு இவ்வளவு செலவாகும் என்று கணக்கு போட்டு நான் சொன்னேன். அப்போது பார்த்திபன் சார் மீடியம் தரத்துக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். நான் தோராயமாக இத்தனை பிரேம்கள் வரும் என்று கணக்கு போட்டு 68 லட்சத்துக்கு சொல்லிருந்தேன். மீடியம் தரத்தில் எங்களுக்கு கொடுத்த நாலு மாதத்தில் எந்த அளவுக்கு வேலை பார்க்க முடியுமோ அந்த அளவுக்கு வேலை பார்த்துக் கொடுத்தோம். அப்போது அதிகமாக வேலைகள் கொடுத்தார்கள். அதோடு குவாலிட்டி பெஸ்ட் ஆக வேண்டும் என்று கேட்டு இருந்தார்கள். நாங்கள் செய்த வேலைகளில் நிறைய மாற்றங்கள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். இதனால் நாள்கள் இழுத்துக் கொண்டே சென்றது. பின் வேலை முடிவதற்கு தாமதமானதால் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நிறுத்தி வைத்து விட்டார்கள்.
பார்த்திபன் மீது குற்றச்சாட்டு:
அதுமட்டுமில்லாமல் இதுவரைக்கும் அவர்கள் எங்களுக்கு 37 லட்சம் தான் கொடுத்திருக்கிறார். ஆனால், 40 லட்சம் கொடுத்திருப்பதாக புகாரில் சொல்லி இருக்கிறார்கள். மேலும், நாங்கள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு மேற்பார்வை பார்க்கப் போவோம். அதற்கு அவர்கள் தான் எங்களுக்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும். ஆனால் அதுவும் தரவில்லை. நாங்கள் வேலை பார்க்கும் போது பார்த்திபன் சாரிடம் எங்கள் வேலைக்கான பணத்தை கேட்டு அவர் வேலையை முடித்ததும் தருவதாக சொன்னார். நாங்கள் வேலையை முதலில் முடித்து கொடுத்தோம். பின் ஒரு 60 சாட்டில் சில மாற்றங்கள் சொன்னார். அப்போ பணம் நமக்கு கிடைக்காதுன்னு 60 சாட்டில் வாட்டர் மார்க் வைத்து கொடுத்தேன். இதனால் பார்த்திபன் எனக்கு திட்டி வாய்ஸ் மெசேஜ் எல்லாம் செய்திருந்தார். அவர் சொன்ன மாற்றங்கள் எல்லாம் வைத்து ப்ரேம்க்கு கணக்கு பார்த்தால் 80 லட்சம் ரூபாய் வருது.
பார்த்திபன் பேட்டி:
அதுக்காக நான் வெளியில் கடன் எல்லாம் வாங்கி இருந்தேன். பணம் பத்தவில்லை என்று நகையெல்லாம் அடமானம் வைத்து இந்த வேலையை முடித்தேன். இது தொடர்பாக போலீஸ் என்னை விசாரித்த போதும் அவர்களிடமும் எல்லாம் சொன்னேன். மே மாதத்திலேயே முடித்து கொடுத்தும் விட்டேன் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து பார்த்திபன் அளித்த பேட்டியில், விஎஃப்எக்ஸ் மோசடி மன்னன் தான் படம் தாமதமானதற்கு காரணம். போன வருடம் ஜூன் மாதத்தில் இந்த படத்தை எடுத்து முடித்து அக்டோபர் மாதத்தில் எடிட் வேலை எல்லாம் முடித்து அவரிடம் வேலைகளுக்கு கொடுத்து விட்டேன். அவர் பிப்ரவரி மாதம் வரைக்கும் டைம் கேட்டார். இருந்தும் முடித்து தரவில்லை. அந்த நேரத்தில் நான் டென்ஷன் ஆகி கத்த ஆரம்பித்து விட்டேன். ஏப்ரல் மாதம் ரிலீஸ் வைத்து நான் விநியோகஸ்தர்களிடம் கமிட் பண்ணிவிட்டேன். ஆனால், அந்த வேலையை அவர் பண்ணவில்லை. வேறு ஒரு படத்தின் வேலையை தான் செய்து இருந்தார். அதற்குப் பிறகுதான் போலீசில் புகார் கொடுத்தேன். அப்போதே அவரை கைது செய்கிற மாதிரி தான் இருந்தது. அப்படி தரம் தாழ்த்தி நான் செய்ய விரும்பவில்லை என்று கூறுகிறார்.