விஜய் 63..! அட்லீக்கு ஏஜிஎஸ் நிறுவனம் போட்ட அதிரடி நிபந்தனை.!

0
768
- Advertisement -

விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார், அட்லி. ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது, இந்தக் கூட்டணி.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள், நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி!

-விளம்பரம்-

vijay and atlee

- Advertisement -

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘தெறி’, ‘மெர்சல்’ இரண்டு படங்களும் பெரிதாகப் பேசப்பட்டாலும், இரண்டு படங்களுக்குமே செலவிடப்பட்ட பணத்தின் மதிப்பு அதிகம். குறிப்பாக, ‘மெர்சல்’ படத்திற்கு அப்போது மத்திய அரசின், ஜிஎஸ்டி வரி, சினிமா பிரச்னைகள்… எனப் பல சிக்கல்கள் இருந்ததால், படத்திற்கான முதலீட்டைத் திரும்பப் பெருவதில் தயாரிப்பாளர் ‘தேனாண்டாள்’ முரளிக்கு சிக்கல் இருந்தது. ‘அட்லியை வைத்துப் படமெடுத்தால், பட்ஜெட் அதிகமாகும்’ என்ற பேச்சும் நிலவியது.

ஏனெனில், அட்லி செய்த காரியம் அப்படி!. ‘தெறி’ படத்தில் நடித்த எமி ஜாக்‌ஷனுக்கு ஒண்ணே முக்கால் கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரைப் பெரிதும் பயன்படுத்தவில்லை, இயக்குநர் அட்லி. அவரது பாடல் காட்சிகூட படத்தின் கடைசியில் ஸ்கார்ல் காட்சியாக ஓடியது. அட்லியின் இந்த ‘தாம்தூம்’ ஸ்டைல் விஜய்க்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், ‘தெறி’ படத்தின் மேக்கிங் விஜய்க்கு ரொம்பப் பிடித்துப்போனது. எனவேதான், ‘மெர்சல்’ படத்திலும் வாய்ப்பு கொடுத்தார்.

-விளம்பரம்-

ஆனால், இந்தப் படத்திலும் அந்தப் பிரச்னை தொடர்ந்தது. இப்போது ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ படத்திற்காக வடிவேலுவின் கால்ஷீட் தேதிகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். ஆனால், வெளிநாட்டில் 30 நாள்கள், சென்னையில் 10 நாள்கள்… என ‘மெர்சல்’ படத்துக்காக வடிவேலு 40 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். தினசரி தவறாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவருக்கு, பெரும்பாலான நாள்களில் காட்சிகள் இல்லை. படத்திலும் சில காட்சிகளையே ஒதுக்கியிருந்தார், அட்லி. வடிவேலுக்குப் பல கோடி சம்பளம் கொடுத்தும், அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை. இப்படித்தான், படத்திற்கான பட்ஜெட் விரயம் ஆனது.

atlee

‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு லண்டன் சென்ற அட்லி, அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இறங்கினார். போயஸ் கார்டன் சென்று ரஜினியை சந்தித்துக் கதையும் சொன்னார். விரைவில் ரஜினி அழைப்பார் என்று காத்திருந்த அட்லிக்கு, ‘கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி’ என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்க, ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, மீண்டும் விஜய் பக்கமாகத் திரும்பியிருக்கிறார், அட்லி. ‘மெர்சல்’ படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் அட்லியின் சில நடவடிக்கைகளால் விஜய்க்கு வருத்தம் ஏற்பட்டது. அதனால், இருவருக்கும் அறிமுகமான நண்பர்கள் வாயிலாக தூது அனுப்பி விஜய்யை சமாதானம் செய்தார், அட்லி. இந்த சமாதானத்திற்குப் பிறகே, ‘விஜய் – அட்லி’ கூட்டணி மீண்டும் சாத்தியமாகியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்துக்குப் பிறகு, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக கால்ஷீட் கொடுத்திருந்தார், விஜய். தவிர, ஏஜிஎஸுக்குக் கதை சொல்லச் சொல்லி அட்லியை அனுப்பி வைத்தார். ஏற்கெனவே தேனாண்டாள் நிறுவனத்தைத் திகைக்க வைத்த அட்லியின் ‘ஆற்றல்’ ஏஜிஎஸ்ஸுக்குத் தெரியும் என்பதால், அட்லியை எப்படி ஹேண்டில் செய்வது என்று முன்கூட்டியே திட்டமிட்டுக் கொண்டார்கள் ஏஜிஎஸ் தயாரிப்பாளார்கள். அதாவது, ‘ஏஜிஎஸ் நிறுவனத்தில் உள்ள ஆபிஸிலேயே உதவி இயக்குநர்களுடன் படம் சம்பந்தமான வேலைகளைச் செய்யவேண்டும். தனியாக ஆபீஸ் கேட்டால், அதற்கான வாடகை மற்றும் இதர செலவுகளை எல்லாம் அட்லியே பார்த்துக்கொள்ள வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். தவிர, விஜய் படத்திற்கு ஆகவேண்டிய செலவு சம்பந்தமான பட்ஜெட் முழுவதையும் முன்கூட்டியே அக்ரிமென்ட்டில் போட்டு, அட்லியிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். திட்டமிட்ட தொகையைவிட பட்ஜெட் அதிகமானால், அந்தப் பணத்தை அட்லியின் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளப்படும் என்றும் அட்லிக்குக் கறார் கண்டிஷன் போடப்பட்டிருக்கிறது. அத்தனை நிபந்தனைகளையும் முழுமையாக ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறார், அட்லி.

Atlee

‘மெர்சல்’ திரைப்படம் பட்ஜெட் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தன்னை பிரமாண்டமாகக் காட்டிய படம் என்பதால்தான், மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்.

Advertisement