‘என் வாய்ல ‘கருணாநிதி’னு வராதுங்க அண்ணா’ – அண்ணாமலையின் வீடியோ படு வைரல். நெட்டிசன்கள் கமெண்ட்ஸை பாருங்க.

0
579
annamalai
- Advertisement -

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை குப்புசாமி. இவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அதோடு இவர் விவசாய குடும்பத்தை சேந்தவர். இவர் அரசியல்வாதி தாண்டி முன்னாள் காவல்துறை அதிகாரியும் ஆவார். இவர் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு எழுதி பல நேர்காணலை சந்தித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல மாவட்டங்கள், மாநிலங்களில் காவல் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். பின் இவர் 2001 ஆம் ஆண்டு பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் அரசியல்வாதியாக இருந்தாலும் மிக திறமையான அதிகாரியும் ஆவார். இவர் அரசியலில் நுழைந்தலில் இருந்து இவருடைய பேச்சுகளும், கருத்துக்களும் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் எது ஒன்று பேசினாலும் அதை கொளுத்தி விடுவதற்கு என்று ஒரு கும்பல் இருக்கிறார்கள். அந்த வகையில் கலைஞர் கருணாநிதி பற்றியும், மு க ஸ்டாலின் குறித்தும் அண்ணாமலைப் பேசிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் திரு. அண்ணாமலை அவர்கள் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவர் அண்ணாமலை இடம் ஸ்டாலின் தனது அரசியல் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்ததால் வம்சாவழி அரசியலிருந்து பதவிகளை பெற்றவர் அல்ல.

- Advertisement -

அண்ணாமலை அளித்த பேட்டி:

ஆனால், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பலன் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். அதேபோல் கனிமொழியின் சிந்தனை முற்போக்கானது என்றும், எப்போதும் கருணாநிதி என்று சொல்ல மாட்டேன் என்றெல்லாம் நீங்கள் பேசி இருந்தார்கள். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டிருந்தார். அதற்கு அண்ணாமலை கூறி இருப்பது, இப்போதெல்லாம் யாரும் முட்டாள் இல்லை. எல்லோரும் படித்திருக்கிறார்கள். நானும் படித்தவன், பார்வையாளர்களும் படித்திருக்கிறார்கள். ஏதாவது சந்தேகம் இருந்தால் கூகுள் செய்யும் அளவுக்கு எல்லோரும் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலின் குறித்து அண்ணாமலை சொன்னது:

இப்படி இருக்கும் நிலையில் தமிழகத்தில் அப்படியான கருத்துக்களை கூற முடியாது. திரு. ஸ்டாலினின் எந்த ஒரு நடவடிக்கையையும் நான் விமர்சித்தால் அது விவாதத்திற்குரியது. மேலும், வம்ச அரசியலில் ஆதாயம் பெற்று அரசியல்வாதியாக அவர் ஆட்சி செய்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள். கடந்த 40 ஆண்டுகளாக ஒப்பிற் அரசியலில் இருக்கிறார். ஒரு தொகுதியில் நின்று தேர்தலில் தோல்வி அடைந்த போது அதே தொகுதியில் மீண்டும் நின்று கடுமையாக போராடி வெற்றி பெற்றிருக்கிறார். அப்படி இருக்கும் அவர் வம்ச அரசியல்வாதி என்று முத்திரை குத்த முடியாது. அதுமட்டுமில்லாமல் கலைஞர் அவர்கள் இதில் எதையும் அவருக்கு எளிதாக கொடுத்து விடவில்லை.

-விளம்பரம்-

கலைஞர் குறித்து அண்ணாமலை சொன்னது:

அதேபோல் நான் கலைஞர் என்று அவரே குறிப்பிடுவதற்கு அவருடைய சாதனைகள் தான் காரணம். நான் ஒருபோதும் அவருடைய பெயரை கருணாநிதி என்று உச்சரிக்க மாட்டேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை பார்த்து வளர்ந்தவன். நான் அரசியல் காரணங்களுக்காக அவரை விமர்சிப்பது முற்றிலும் வேறுபட்டது. அவரது வாழ்நாள் முழுவதையும் ஆராய்ந்து பார்த்தால் தமிழ்நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் அவர் என்ன எல்லாம் செய்தார் என்று பார்த்தால் கலைஞர் தான் முதலிடத்தில் இருப்பார். அதனால் தான் அவருக்கு கலைஞர் என்ற பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

வீடியோவை வைரலாகும் நெட்டிசன்கள்:

அப்படி இருக்கும் நிலையில் அவரை நான் எப்படி கருணாநிதி என்று கூப்பிட முடியும் என்று கலைஞரை குறித்தும் அவருடைய மகன் மு க ஸ்டாலின் குறித்தும் அண்ணாமலை கூறிய தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் இவர் பேசியதை பதிவிட்டு பல விதமான காட்மண்டுகளை போட்டு வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

Advertisement