‘அட கண்றாவியே எப்படி இருந்த மனுஷன் எப்படி ஆகிட்டாரு’ – நெல்சனின் பேச்சை கேட்டு வருத்தப்படும் ரசிகர்கள். வீடியோ இதோ.

0
391
nelson
- Advertisement -

சமீபத்தில் வெளியாகி இருக்கும் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் நெல்சனை கலாய்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படத்திற்கு பின்னர் மேடையில் பேசிய நெல்சனின் வீடியோவை கண்டு ரசிகர்கள் பலரும் தன்னை கேலி செய்வதால் தான் நெல்சன் இப்படி ஆகிவிட்டார் என்று கூறி வருகின்றனர். நெல்சன் இறுதியாக இயக்கிய பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால் அவரை பலரும் கலாய்த்து தள்ளினர். இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் நெல்சனை கலாய்த்து பல விதமான மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-54-1024x945.jpg

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய அணைத்து படங்களும் வெற்றியடைந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்து இருக்கிறது. இதனால் லோகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜை பாராட்டி வருவதை விட பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை குறிப்பிட்டு தான் பல மீம்கள் வந்து கொண்டு இருக்கிறது.

இதையும் பாருங்க : ‘கல்யாணம் ஆகி ஒரு கொழந்த இருக்கு ஏன் இப்படி’ – pbs போட்டோவிற்கு நடிகர் போட்ட கமன்ட்டால் கேலி செய்யும் ரசிகர்கள்.

- Advertisement -

Fan Boy சம்பவத்தை கோட்டை விட்ட நெல்சன் :

விக்ரம் படம் ஓடியதற்கு நெல்சனை கலாய்க்க முக்கிய காரணம் இயக்குனர் நெல்சன் விஜய்யின் தீவிர ரசிகர். பீஸ்ட் படம் எடுப்பதற்கு முன்னாள் அவர் கண்டிப்பா ஒரு Fan Boy சம்பவத்தை செய்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், லோகேஷ் கனகராஜும் கமலின் தீவிர ரசிகர் தான். எனவே, அவரும் கமலை வைத்து ஒரு தரமான Fan boy சம்பவத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதை நிறைவேற்றி இருக்கிறார் லோகேஷ்.

நெல்சனை கலாய்க்க காரணம் :

இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் நெல்சனை திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்கு பின்னர் விருது விழா ஒன்றில் பங்கேற்ற நெல்சனை, மேடையில் ஆடும்படி பூஜா ஹேக்டே கூறி இருந்தார். அதற்கு நெல்சன் ‘அவங்கள இப்படி மாட்டிவிட்டா என்ன இப்படி மாட்டி விட்ருவாங்க’ என்று சொல்ல மேடையில் இருந்த பிரியங்கா ‘நீங்க யார்னா மாட்டிவிடுங்க’ என்று சொன்னார். அதற்கு நெல்சன் ‘ஏற்கனவே நான் நல்லா மாட்டி இருக்கேன், நான் பேசமா கீழ போய் ஒக்காந்துக்குறேன்’ என்று பேசியுள்ளார்.

-விளம்பரம்-

வருத்தப்படும் நெட்டிசன்கள் :

பொதுவாக நெல்சன் படத்தை போல நிஜத்திலும் நெல்சன் ஜாலியான ஒரு நபர் தான். அவர் அளித்த பல பேட்டிகளில் அவர் மிகவும் ஜாலியாக தான் பேசுவார். அவ்வளவு ஏன் டாக்டர் படத்தின் பாடல் வெளியிட்டுக்கு முன்பு பாடலுக்காக அவர் செய்த ப்ரோமோ வீடியோக்கள் எல்லாம் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படத்தின் தோல்வியால் தான் நெல்சன் இப்படி பேசி இருக்கிறார் என்று இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

வருத்தப்பட்ட லோகேஷ் :

ஏற்கனவே பேட்டி ஒன்றில் விக்ரம் படத்துடன் ஒப்பிட்டு நெல்சனை கலாய்ப்பது குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் ‘எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது, நெல்சன் எனக்கு நெருங்கிய நண்பர். எல்லோருக்கும் ஒரு இயல்பு உள்ளது, அதேபோல் எப்போதும் ஜாலியாக பேசும் இயல்புடையவர் நெல்சன். அவர் அப்படி இயல்பாக பேசியதை தவறாக எடுத்துக்கொண்டு ட்ரோல் செய்கிறார்களா என்பது தெரியவில்லை.வெற்றியடையும் போது கொண்டாடிவிட்டு, தோல்வியடையும் போது விமர்சனம் செய்துவது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அளவுக்கு மீறின விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது’ என்று கூறியுள்ளார்.

Advertisement