தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. மேலும், இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.
நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்து இருந்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார் ப்ரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து இவர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம்.
இதையும் பாருங்க : பொன்னியின் செல்வனில் நடிக்கிறாரா ஷாலினி ? அஜித் ரசிகர்களின் 21 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த விடை.
ஓ மணப்பெண்ணே படம்:
அதனை தொடர்ந்து சமீபத்தில் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘ஓ மணப்பெண்ணே’. இந்த திரைப்படம் ஹாட் ஸ்டார் Ott தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அபிஷேக் குமார், அன்புதாசன், அனிஷ் குருவில்லா, குக் வித் கோமாளி அஸ்வின், கே எஸ் ஜி வெங்கடேஷ் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
பிரியா பவானி சங்கர் நடிக்கும் படங்கள்:
தற்போது ப்ரியா பவானி சங்கர் அவர்கள் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் யானை படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகி பாபு, இமான் அண்ணாச்சி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும், கேஜிஎஃப் படத்தில் கருடனாக நடித்த ராம் வில்லனாக படத்தில் படத்தில் நடித்திருக்கிறார். மேலும், இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பிரியா பவானி சங்கர் போட்ட டீவ்ட்:
இதனை தொடர்ந்து இவர் குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன், மற்றும் இந்தியன் 2 போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக இருந்தாலும் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் சனிக்கிழமை அன்று பிரியா பவானி சங்கர் அவர்கள் தான் நடித்த அகிலன் படத்தின் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அதாவது, அகிலன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.
நடிகர் சதீஸ் போட்ட டீவ்ட்:
அதனுடைய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, இந்த வார இறுதியில் என்ன திட்டம் என்று கேட்டிருக்கிறார். இதை பார்த்த நடிகர் சதீஷ், அந்த ஸ்டேஷனில் அர்ரெஸ்ட் ஆகுவது தான் குறிப்பிட்டிருக்கிறார். உடனே பிரியா பவானி சங்கர், வாங்க சதீஸ் என்று பதிவிட்டு காதலன் படத்தில் வரும் பெண் போலீஸ் புகைப்படம் ஒன்றையும் போட்டுள்ளார். நடிகர் சதீசுக்கு திருமணம் ஆகி கடந்த 2020 ஆம் ஆண்டு தான் ஒரு மகள் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.