அமலா பாலின் கவர்ச்சி புகைப்படத்திற்கு பிரேம்ஜி போட்ட கமன்ட், கழுவி ஊற்றும் ரசிகர்கள் (த்ரிஷாக்கும் இதே பிட்டு தான்)

0
16436
premji
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன். சிம்பு இயக்கி, நடித்த ‘வல்லவன்’ படத்தில் பிரேம்ஜி அமரன் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘சென்னை 28’ படத்தில் முழு நீள காமெடி ரோலில் பிரேம்ஜி நடித்திருந்தார். ‘சென்னை 28’ படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சென்னை 28’ படத்துக்கு பிறகு “சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா” என அடுத்தடுத்து பல படங்களில் பிரேம்ஜி அமரன் நடித்தார்.

-விளம்பரம்-

மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததை விட, வெங்கட் பிரபு இயக்கிய “சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 – 2” போன்ற படங்களில் பிரேம்ஜி அமரனுக்கு அதிக ஸ்கோப் இருக்கும். காமெடியனாக மட்டுமே வலம் வந்த பிரேம்ஜி அமரன், 2015-ம் ஆண்டு வெளியான ‘மாங்கா’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஏதாவது கிண்டலுக்கு உள்ளாகிவிடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் அமலா பாலின் கவர்ச்சி புகைப்படத்திற்கு செய்த கமன்ட் கேலிக்கு உள்ளாகியுள்ளது. சமீபத்தில் நடிகை அமலா பால் படு கவர்ச்சியான உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இதற்கு நடிகர் பிரேம்ஜி, அசுத்த போன படி ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், யோவ் கல்யாணத்தை பண்ணி தொலையா… அசிங்கமா எப்போ பாரு ஹீரோயின்ஸ் picல கமென்ட் பண்ணிட்டு இருக்க என்று கேலி செய்துள்ளார். இதே போல தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திரிஷா பதிவிட்ட புகைப்படத்திற்கு இதே ரியாகேஷனை கொடுத்து இருக்கிறார் பிரேம்ஜி.

-விளம்பரம்-

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த், எஸ் ஜே சூர்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு நடிகர் பிரேம்ஜி ஜொள்ளு விடும் வகையில் கமன்ட் செய்துள்ளார். நடிகர் பிரேம்ஜி பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் தான் இருக்கிறார். இது குறித்து விளக்கமளித்த அவர்,

வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என கூறி விட்டேன். என்னுடைய வாழ்க்கையில நிம்மதியா, ஜாலியா இருக்க விரும்புகிறேன். நமக்கு எதுக்கு கல்யாணம், குழந்தை குட்டி எல்லாம். தனியாக வாழ்ரது தான்மகிழ்ச்சி. மத்தவங்களுக்காக வாழ விரும்பல. எனக்காக வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement