முன்னனி நடிகரை எட்டி உதைத்த நேர்கொண்ட பார்வை பட நடிகை வித்யா பாலன். வைரலாகும் வீடியோ.

0
1841
Vidhya-Balan
- Advertisement -

கடந்த 2003-ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளி வந்த திரைப்படம் ‘பலோ தேகோ’. இந்த படத்தினை இயக்குநர் கெளதம் ஹல்தர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக வித்யா பாலன் நடித்திருந்தார். இது தான் வித்யா பாலன் அறிமுகமான முதல் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் நுழைந்த நடிகை வித்யா பாலன், ‘பரிநீதா, லகே ரகோ முன்னா பாய், குரு, பா’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

அதன் பிறகு மலையாளத்தில் ‘உருமி’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் நடிகை வித்யா பாலன். இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வித்யா பாலன், தமிழ் திரையுலகிலும் கால் பதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

- Advertisement -

தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இது தான் வித்யா பாலன் தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்திருந்தார்.

Was Akshay Kumar necessary in Mission Mangal? No, but faayda hua ...

நடிகை வித்யா பாலனுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, வித்யா பாலன் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ பதிவில் ஹிந்தி திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அக்ஷய் குமாருடன், நடிகை வித்யா பாலன் சண்டை போட்டு கொண்டிருக்கிறார். சண்டையின் முடிவில் வித்யா பாலன் அக்ஷய் குமாரின் அடி வயிற்றில் எட்டி உதைத்து விட்டார்.

-விளம்பரம்-

இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இவ்வீடியோ ‘மிஷன் மங்கல்’ என்ற ஹிந்தி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக எடுக்கப்பட்டதாம். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தினை இயக்குநர் ஜெகன் சக்தி இயக்கியிருந்தார். இதில் அக்ஷய் குமார், வித்யா பாலனுடன் சேர்ந்து சோனாக்ஷி சின்ஹா, டாப்சி, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானதாம்.

Advertisement