இந்த வயதிலும் கடற்கரையில் ஆட்டம் போடும் வித்யா பாலன்.! நீங்களே பாருங்களேன்.!

0
673
Vidhya-Balan

இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை வித்யா பாலன். இந்தியில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ள இவர், தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார்.

நடிகர் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை ‘படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார் வித்யா பாலன்.

இதையும் படியுங்க : 6 வது முறை சிகிச்சை.! பணமில்லாமல் கையேந்தும் நடிகை.! இப்படி ஒரு பரிதாப நிலையா ? 

இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்த வித்யா பாலன் இடைப்பட்ட காலத்தில் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். ஆனால், இவரது நடிப்பில் கடந்த 2011 ஆம் வெளியான ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் இவருக்கு ஒரு ரீ என்ட்ரி படமாக அமைந்தது. அந்த படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை துவங்கினார் வித்யா பாலன்.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் வித்யா பாலன் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாகி இருந்தது.

தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வரும் வித்யா பாலன் சமீபத்தில் கவர்ச்சியான உடையில் கடற்கரையில் ஆட்டம் போட்டுள்ளார். அப்போது எடுக்கபட்ட சில புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.