நீங்க ஐயங்காரங்களா? கையில் மீனுடன் போஸ் கொடுத்த வித்யு ராமன். ஷாக்கான ரசிகர்கள்

0
2161
Vidhyu
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை வித்யுலேகா ராமன். இவர் 2011 ஆம் ஆண்டு கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த நீதானே பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். இதனை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்திலும் நடித்திருந்தார். பிறகு வீரம், ஜில்லா என்று பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் இனிமேல் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

இவருடைய நகைச்சுவை திறமையின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். சமீப காலமாகவே இவருக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றவுடன் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார். தன்னுடைய அப்பாவின் துணையால் தான் நடிகை வித்யுலேகா சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென ஒரு முத்திரையைப் பதித்ததார்.

- Advertisement -

தற்போது இவர் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நாயகியாக பட்டையை கிளப்பிக் கொண்டு வருகின்றார். அடிப்படையில் நடிகை வித்யூலேகா அவர்கள் ஒரு பிராமின் ஆவார். இந்நிலையில் இவர் தன்னுடைய கையில் மீனை வைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

இதற்கு ரசிகர்களும் பல கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சில பேர் ஒருவேளை மீன் சாப்பிட்டால் உடல் எடையை குறைத்து விடலாம் என்ற காரணத்தினால் இருக்குமோ என்றும், வேறு சில பேர் கல்கத்தாவின் குடும்பமாக இருப்பார்களா என்றும் கூறி உள்ளார்கள். இப்படி நடிகை வித்யூலேகா பதிவிட்ட புகைப்படம் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

-விளம்பரம்-
Advertisement