ஏற்கனவே விவாகரத்து ஆன பெண்ணுடன் துப்பாக்கி, அஞ்சான் பட நடிகருக்கு திருமணம் – பொண்ணு யார் தெரியுமா ?

0
348
vidyut-jamwal
- Advertisement -

துப்பாக்கி பட வில்லனுக்கு லண்டனில் திருமணம் நடைபெற இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய திரைப்பட உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் வித்யூத் ஜம்வால். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் வடிவழகனாகவும், தற்காப்பு கலைஞராகவும் உள்ளார். இவர் முறையாக களரிப்பயிற்று என்ற கலையும் கற்றவர். 2011 ஆம் ஆண்டு வெளிவந்த போர்ஸ் என்ற இந்தி படத்தின் மூலம் தான் வித்யூத் ஜம்வால் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த பில்லா 2 படத்தில் நடித்து இருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது துப்பாக்கி படம் படம். 2012 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் துப்பாக்கி. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வித்யூத் ஜம்வால்.

- Advertisement -

இதையும் பாருங்க : இந்த விக்ரம விடுங்க 35 ஆண்டுகளுக்கு முன் வெளியான விக்ரம் படத்தை திரையரங்கில் பார்த்த வந்த கூட்டம் இதான்.

வித்யூத் ஜம்வால் திரைப்பயணம்:

அதை தொடர்ந்து இவர் 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். மேலும், இவர் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் வித்யூத் ஜம்வாலுக்கு திருமணம் நடைபெற இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

வித்யூத் ஜம்வால் – நந்திதா நிச்சயதார்த்தம்:

சமீபத்தில் தான் நடிகர் வித்யூத் ஜம்வால் – நந்திதா திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. நந்திதா அவர்கள் மிக பிரபலமான ஆடை வடிவமைப்பாளர். நந்திதாவுக்கும், வித்யூத் ஜம்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே சோசியல் மீடியாவில் பேசப்பட்டு இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து இருந்தது.

நந்திதா குறித்த தகவல்:

மேலும், நடிகர் வித்யூத் ஜம்வால் சமீபத்தில் தன்னுடைய காதலியுடன் சேர்ந்து தாஜ்மஹாலுக்கு சென்று இருந்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதில் நந்திதா கை விரலில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து இருந்தார். மேலும், நந்திதா ஏற்கனவே டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்யூத் ஜம்வால் திருமணம்:

இந்நிலையில் வித்யூத் ஜம்வால் மற்றும் நந்திதா திருமணம் இந்த மாதம் லண்டனில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், திருமண தேதி குறித்த தகவல் எதுவும் கூறப்படவில்லை. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நடிகர் வித்யூத் ஜம்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement