டே சும்மார்ரா. ஈஸ்டர் நாளில் நயனுடன் நெருக்கமாக விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோ – புலம்பும் ரசிகர்கள்.

0
1014
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று செய்திகள் பரவியது.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த விக்னேஷ் ஷுவான் இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது அதனை அடைந்து முடித்த பின்னர் தான் திருமணம். அதேபோல இப்போது எங்கள் இருவருக்கும் காதல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அந்த லவ் நல்லா இருக்கிறது. அந்த காதல் போர் அடித்து விட்டால் திருமணம் செய்துகொண்டுகொள்வோம் என்று கூறி இருந்தார்.

எந்த பண்டிகை வந்தாலும் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் புகைப்படத்தை எடுத்து அதனை தனது சமுக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (ஏப்ரல் 4) ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ் ஜே சூர்யா நொந்து போய் சொல்லும் ”டேய் சுமார்ரா’ என்ற வசனத்தை போட்டு புலம்பியுள்ளனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தனது கையில் அணிந்திருக்கும் மோதிரம் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்.இதனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்குமோ என யூகங்கள் கிளம்பியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதுAdvertisement