‘ஏமாற்றம்தான், ஆனா’ கைநழுவி போன AK62 குறித்து முதன் முறையாக சொன்ன விக்னேஷ் சிவன்.

0
281
- Advertisement -

ஏகே 62 படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து விக்னேஷ் சிவன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட் ஸ்டாராக பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் திரைப்படம் வெளியானது.

-விளம்பரம்-
ak62

இப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். மேலும், இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். இதனை அடுத்து அஜித் AK 62 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ஏகே 62 படம்:

மேலும், இப்படத்தை லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்றும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களை தேடும் பணியில் படக்குழு இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் சந்தானம் நடிக்க இருகிறார் என்று சினிமா வட்டாரங்களில் என்ற பேச தொடங்கி இருந்தது. இப்படத்தில் சந்தானம் காமெடியனாக மட்டும் நடிக்காமல் வேறு ஒரு கதாபாத்திரமாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தது.

படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்:

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகவும், வில்லனாக அரவிந்த சாமி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இப்படி AK62 படத்தை பற்றி பல தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில் இப்படத்தின் கதை அஜித்திற்கும், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் லைகா AK62வில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. மேலும், அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்குவார் என்று கூறப்பட்டது.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி:

அதே போல Ak62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்க இருக்கிறார் என்ற தகவல் உறுதியானது. இதனை தொடர்ந்து பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்த நிலையில் இது குறித்து விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், எல்லாவற்றையும் நாம் சமாளித்து தான் ஆக வேண்டும். அந்த படம் என் கையை விட்டுப் போனதில் எனக்கு ரொம்ப ஏமாற்றமாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு அந்த கதையின் இரண்டாம் பாதி பிடிக்கவில்லை. அந்த இரண்டாம் பாதியை அவர்களுக்காக மாற்ற முடியவில்லை. கதையாக நான் அஜித் சாரிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டேன். ஆனால், தயாரிப்பாளர்கள் கதை அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என்று சொல்லும்பொழுது அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மகிழ் திருமேனி உடன் படம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் ரொம்ப நல்ல இயக்குனர்.

ஏகே 62 பட வாய்ப்பு இழந்தது குறித்து சொன்னது:

சில சமயங்களில் சில விஷயங்கள் நமக்கு சீக்கிரம் கிடைக்கிறதா? இல்லை தாமதமாக கிடைக்கிறதா? என்பதெல்லாம் தெரியாது. என்ன பொருத்தவரை இந்த வாய்ப்பு எனக்கு கொஞ்சம் சீக்கிரமாக கிடைத்திருக்கிறது என்று நான் நினைத்துக் கொள்கிறேன். ஒருவருக்கு வாய்ப்பு போனால் தான் இன்னொருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். எனக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், நான் சென்றதால் மகிழ்திருமேனி போன்ற மிகச் சிறந்த இயக்குனருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அஜித் சாருடன் படம் பண்ணுவது ஒரு பக்கம் இருந்தாலும் அவருடன் இருப்பது, பார்ப்பது, அவரிடம் பழகுவது அந்த மாதிரி நேரங்கள் தான் எனக்கு மிகவும் முக்கியம். அது கைநழுவி போனதில் தான் எனக்கு வருத்தம். இது முழுவதுமாக முடிந்து விடப் போவதில்லை. கொஞ்சம் தாமதமாக நடக்கலாம். எல்லாவற்றையும் நாம் பாசிட்டிவாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement