பிரம்மாண்டமா கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யும் விக்னேஷ் சிவன்- இது முடிஞ்சதும் கல்யாணம் தான்

0
463
vigneshshivan
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன்- நயன்தாரா. விக்னேஷ் சிவனுக்கு முன்பாகநயன்தாரா அவர்கள் சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் நயன்தாரா மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும், இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி வெளிநாடு செல்வது அங்கு எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போடுவது என்று காதல் புறாக்களாகவே இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவர்களைப் பற்றி ஏதாவது ஒரு நியூஸ் கிடைத்தால் போதும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரென்டிங் ஆகிவிடுவார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களுடைய திருமணம் எப்போது என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதோடு இவர்களின் திருமணம் பற்றி தான் ரசிகர்கள் பலரும் ஏதாவது ஒரு புரளியை சோசியல் மீடியாவில் கிளப்பி கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் – நயன் கல்யாணம் பற்றி வரும் கருத்துக்கள்:

அதற்கு விக்னேஷ் சிவன் – நயன் இருவரும் பதிலளித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று செய்திகள் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த விக்னேஷ் ஷுவன் இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து இருக்கிறார்கள். ஆனாலும், நாங்கள் இருவரும் அவரவர் வேலையை பார்த்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது அதனை முடித்த பின்னர் தான் திருமணம் என்று கூறி இருந்தார்.

விக்னேஷ் சிவன் – நயன் நிச்சயதார்த்தம்:

இருந்தாலும் ரசிகர்கள் இதை விடுவதாக இல்லை. அதேபோல் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா தங்களின் நிச்சயதார்த்தம் பற்றி கூறி இருந்தார். அதில் அவர், தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது தாங்கள் மிகவும் privateஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் மிகவும் பெரிதாக வெளியில் சொல்லவில்லை . ஆனால், நிச்சயம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன்- நயன் படங்கள்:

மேலும், இவர்கள் இருவரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் இவர்கள் இயக்கத்தில் வெளிவந்த ராக்கி படம் நல்ல விமர்சனத்தை மக்கள் மத்தியில் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து காத்துவாக்குல 2 காதல் படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள், இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதிலளித்து வந்திருக்கிறார்.

திருமணம் குறித்து விக்னேஷ் சிவன் கூறியது:

அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் திருமணம் எப்போது? என்று கேட்டிருக்கிறார். அதற்கு விக்னேஷ் சிவன் கூறியிருப்பது, எங்களுக்குள் காதல் தற்போது நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. எங்களுக்கு என்று தனி குறிக்கோள் இருக்கிறது. அதை கூடிய விரைவில் அடைந்து விட்டு திருமணம் செய்துகொள்வோம். மேலும், சினிமா நட்சத்திரங்களின் திருமணம் என்றால் அதிக செலவாகும். அதை சம்பாதித்தும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து விட்டால் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறி இருக்கிறார். இப்படி விக்னேஷ் சிவன் சொல்லிய பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement