விக்கி -நயன் தங்கியிருந்த இடத்தின் ஒருநாள் Rent மட்டுமே இவ்வளவா ? எந்த நாட்டில் இருக்கு தெரியுமா ? 

0
451
wiki
- Advertisement -

ஸ்பெயின் நாட்டில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தங்கி இருக்கும் ஹோட்டலின் ஒரு நாள் விலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் புதிய இளம் ஜோடிகளாக திகழ்ந்து கொண்டு இருப்பவர்கள் விக்னேஷ் சிவன்- நயன்தாரா. தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் O2.
இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்:

இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நடந்து முடிந்தது. ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது மாதம் சிவன்- நயன்தாரா திருமணம் தான்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின் விக்கி-நயன்:

மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக கோயிலுக்கு சென்று இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. சமீபத்தில் முடிவடைந்த 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் தான் நடத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நயன்தாரா அவர்கள் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து ஜாலியாக வெளிநாடு பயணம் சொன்று இருக்கிறார்.

நயன்-விக்கி விடுமுறை கொண்டாட்டம்:

அந்த வகையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் ஜாலியாக தன்னுடைய கணவருடன் நயன் விடுமுறையை கொண்டாடியிருக்கிறார். சுற்றுலாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். பின் இருவரும் ஐபிஜா தீவில் சுற்றுலா சென்று இருக்கிறார்கள். இந்த தீவில் உள்ள வடமுனையில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் sixth Sensesல் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தங்கி இருக்கின்றனர். அதற்கான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருக்கிறார். இந்நிலையில் இந்த sixth Senses விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் 50 முதல் 70 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

Advertisement