சுற்றுல்லா சென்ற இடத்தில் நயனின் படு ரொமான்டிக்கான போட்டோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.!

0
3736
Vignesh-Nayan
- Advertisement -

தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர். ஆனால், இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.

-விளம்பரம்-

ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவுடன் இருக்கும் ஒரு வித்யாசமான புகைப்படம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டார்கம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் தனியாக சென்றிருந்தார். மேலும் ,அங்கே எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். விக்னேஷ் சிவன் இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நயன்தாராவை விட்டு விட்டு தனியாக ஊர் சுற்றுகிறீர்களே என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட சுற்றுலாவை முடித்து விட்டு அடுத்ததாக விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவுடன் ஏதென்ஸ் பறந்துள்ளார்.

-விளம்பரம்-

ஊர் சுற்ற சென்ற இடத்தில் எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் எப்பொழுது நயன்தாராவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டாலும் அதை பார்த்து கடுப்பாகும் சிங்கிள்ஸ், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்தும் பயங்கர கடுப்பாகியுள்ளனர்.

Advertisement