விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவுடன் எடுத்த இந்த புகைப்படம் தான் புடிக்குமாம் – ரொமான்டிக்கான ஆளு தான்.

0
1128
Vignesh-Shivan
- Advertisement -

தமிழ் திரையுலகில் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘போடா போடி’. இதில் ஹீரோவாக ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமார் டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தினை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இது தான் விக்னேஷ் சிவன் இயக்குநராக தமிழ் சினிமாவில் இயக்கிய முதல் படமாம். இதனைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படத்தில் கதையின் நாயகனாக பிரபல நடிகர் தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தினை வேல்ராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடி தான்’ என்ற படத்தினை இயக்கினார் விக்னேஷ் சிவன். இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.

- Advertisement -

இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரது நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்படம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் இருந்து துவங்கியது விக்னேஷ் சிவனின் திரையுலக வெற்றி பயணம் மட்டும் அல்ல, கூடவே அவருடைய வாழ்க்கை துணையுடனான பயணமும் தான்.

இந்த படத்தில் இருந்தே இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலிக்க தொடங்கி விட்டனர். நயன்தாரா எங்கு சென்றாலும் விக்னேஷ் சிவன் இல்லாமல் செல்வது இல்ல. அதே போல விக்னேஷ் அடிக்கடி நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் இவருக்கு மிகவும் புகைப்படம் இது தானாம். அதே போல நயன்தாராவிடம் தனக்கு மிகவும் பிடித்தது அவரின் தன்னம்பிக்கை தான் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement