சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2.
நயன்தாரா நடிக்கும் படங்கள்:
இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கனெக்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் , ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.
View this post on Instagram
இரட்டை குழந்தைகள் :
இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மேலும் தங்கள் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.
முதல் திருமண நாள் :
இப்படி ஒரு நிலையில் இன்று முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு தனது மகன்களுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கும் விக்னேஷ் சிவன் 'என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே. இந்த ஓராண்டு எண்ணெற்ற நினைவுகள், ஏற்ற தாழ்வுகள், எதிர்பாரதா பின்னடைவுகள், சோதனையான நாட்கள் என்று நிறைந்து இருக்கிறது. ஆனால், வீட்டிற்கு திரும்பி எனது அன்பான குடும்பத்தை பார்க்கும் போது என்னுடைய கனவுகளை நோக்கி ஓட எனக்கு ஒரு சக்தியை கொடுக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி :
இந்நிலையில் முதலாம் ஆண்டு திருமணம் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தன் மனைவி நயன்தாராவிற்கு சர்ஃப்ரைஸ் கொடுத்து உள்ளார். விக்னேஷ் சிவன், 8 ஆண்டுக்கு முன் நயன்தாராவை வைத்து இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் இருந்து 'கண்ணான கண்ணே' பாடலை புல்லாங்குழல் கலைஞர் மூலம் வாசிக்க வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதை விக்னேஷ் சிவனின் மிகவும் நேருக்கமான நபர் வாசித்து அசத்தி உள்ளார். அதனை கேட்டு ரசித்த நயன்தாரா ஒரு கட்டத்தில் ஆனந்த கண்ணீர் வடித்துவிட்டார். நானும் ரவுடி தான் படத்தின் போது தான் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





