இதுக்கு சிம்பு தான் காரணம் – திருமணத்துக்கு பின் பல ஆண்டு ரகசியத்தை உடைத்த விக்னேஷ் சிவன்- என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

0
636
vignesh
- Advertisement -

சிம்பு தூண்டிவிட்டு தான் எனக்குள் இருந்த திறமையை கண்டு பிடித்தேன் என்று விக்னேஷ் சிவன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்-விக்கி. இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த விஷயமாக இருந்தது.

-விளம்பரம்-
நாங்கள் காதலித்து இத்தனை வருடங்கள் ஆகிறது. நயனுடன் இருக்கும் புகைப்படத்தை  பதிவிட்ட விக்கி | Friend photos, Cute love stories, Top celebrities

அனைவரும் எதிர்பார்த்த படி நயன்-விக்கி திருமண விழா சமீபத்தில் தான் மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கி இருந்தது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருந்தது. அதே போல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டிருந்தது.

இதையும் பாருங்க : ராதிகாவை எப்படி நான் அம்மானு கூப்புடுவேன், அவர எப்படி நான் அப்படி கூப்பிட முடியும் – படு ஒப்பானக பேசிய வரலக்ஷ்மி.

- Advertisement -

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்:

பின் அடுத்த நாள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணி முதல் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டி இருந்தார்.

Vignesh Sivan Sister And Mother Image| விக்கி தங்கை

திருமண உடைகள்:

இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். இவர்களுடைய திருமண உடைகள் புகழ்பெற்ற ஜேட் குழுமத்தால் நவீன காலத்திற்கு ஏற்றவாறு பாரம்பரியம் சற்றும் குறையாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. நடிகை நயன்தாரா சிவப்பு நிற புடவை, விக்னேஷ் சிவன் வேஷ்டி குர்த்தி மற்றும் சால்வை ஒன்றை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Complaint Filed On Nayanthara In Human Rights Commission

திருமணம் முடிந்து தம்பதியிகள் சென்ற இடம்:

மேலும், திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருப்பதிக்கு சென்றிருந்தார்கள்.
அங்கு இவர்கள் காலணியுடன் சென்று போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பின் நயன்-விக்கி பேட்டி அளித்து இருந்தார்கள். அதை அடுத்து இவர்கள் கேரளா சென்று இருந்தார்கள். ஜூலை முதல் படத்தில் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி:

அதில் அவரிடம் சிம்பு குறித்து கேட்கப்பட்டதற்கு விக்னேஷ் சிவன் கூடியிருந்தது, எனக்குள் இருக்கும் பாடலாசிரியர் திறமையை தூண்டிவிட்டது சிம்பு தான். போடாபோடி படத்தின் போது சிம்பு பாடல் வரிகளை எழுதும்போது என்னிடமும் ஏதாவது இரண்டு வரிகளை எழுதச் சொல்லுவார். அப்படி அவர் கொடுத்த நம்பிக்கை தான் இப்போது என்னால் சிறந்து விளங்க முடிகிறது என்று விக்கி கூறி இருந்தார். இப்படி விக்கி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.

Advertisement