ஒரு நாள் ஆஸ்கார் அருகில் இருப்பேன்.! விக்னேஷ் சிவனின் டீவீட்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

0
607
Vignesh-Shivan

தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.  

ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்கு ஆஸ்கார் ஆசை வேறு வந்திருக்கிறது.

- Advertisement -

உலகின் தலை சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (பிப்ரவரி 25) 91 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் விருதும் வழங்கபட்டது.

vignesh sivan

இந்த நிலையில் ஆஸ்கார் வென்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் ஒரு நாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை என்று ஆஸ்காரை வெல்வேன் என்று சூசகமாக தெரிவித்தார். இதனை கண்ட நெட்டிசன்கள் காண்டாகி போட்ட கம்மெண்ட்களை மட்டும் பாருங்கள்.

-விளம்பரம்-

Advertisement