விஜய்யின் சர்கார் first look போஸ்டர் இந்த ஹாலிவுட் படத்தின் காபியா..? குழப்பத்தில் ரசிகர்கள்

0
833
sarkar-movie
சர்க்கார்

இளையதளபதி விஜய் , இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இவர்கள் இருவரின் கூட்டணியில் 3 வது முறையாக இடைந்துள்ள படத்திற்கு ‘சர்கார் ‘ என்று பெயரிடபட்டுள்ளது. நேற்று வெளியான இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.

sarkar

பொதுவாக ஒரு படத்தின் போஸ்டர்கள் வந்தாலே, அந்த படம் எந்த படத்திலிருந்து காபி அடிக்கப்பட்டுள்ளதா என்று ஆராயவே பலரும் காத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில் ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் ஹோலிவுட்டில் இருந்து சுடபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்தில் முதல் போஸ்டரில் விஜய்ய்யின் பின்னணியில் ஒரு நகரம் இருப்பது போன்று இருந்தது. ஆனால், ஹாலிவுடில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ரன் ஆள் நைட் ‘ என்ற படத்தின் போஸ்ட்டரை போலவே இருக்கின்றது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதம் போய் கொண்டிருக்கிறது, விஜய் நடித்துள்ள ‘சர்க்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரும் இந்த படத்தின் போஸ்டரும் ஒன்றாகவே உள்ளது.

sarkar

அதுமட்டுமல்லாமல் ‘சர்கார்’ என்ற தலைப்பில் பாலிவுட் நடிகர் அமிதா பச்சன் கடந்த 2005 ஆம் ஆண்டே நடித்துள்ளார் என்ற ஒரு விடயமும் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது. இதனால் பர்ஸ்ட் லுக் வெளியான 1 நாளில் இந்த சோதனையை என்று விஜய் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர்.