இணையத்தில் தீயாய் பரவும் தளபதி 62 படத்தின் தலைப்பு இதுதானா ?

0
3375

மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் தனது ஆஸ்தான இயக்குனர் முருகதாஸை நாடியுள்ளார். விஜய்-62 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 100 கோடிக்கு மேல் பொருட்செலவு செய்து தயாரிக்கவுள்ளது.
vijayசமீபத்தில் கூட இதனை உறுதி செய்யும் வகையில், ஒரு போஸ்டரை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு கேரக்டர்கள். ஒரு விஜய்க்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

அதே, போல ஓளிப்பதிவாளராக மலையாள சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் கிறிஸ் கங்காதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். படத்திற்கு இசை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான்.

படத்திற்கு எடிட்டராக துப்பாக்கி பட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் உள்ளார். மேலும், விவசாயிகள் பற்றிய படமாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது. துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து விஜய் – முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.