வசூல் சக்கரவர்த்தி தளபதி விஜயின் 61வது படமான மெர்சல் கடந்த தீபாவளி அன்று வெளியானது. இந்த படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 62வது படத்திற்காக முறுகதாஸுடன் கூட்டணி போட்டுள்ளார் விஜய்.
இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதுகரித்துள்ளது. படத்தின் இசையமைப்பாளர் அதற்குள்ளாக ஒரு பாடலுக்கு இசை அமைத்துவிட்டார். இந்த பாடல் மெர்சல் படத்தில் வந்த ஆளப்போறான் தமிழன் பாட்டை போல இருக்கும் என கூறப்படுகிறது.
அதற்குள்ளாக ப்ரீ ப்ரொடக்சன் வேலைகளை முடிக்க துவங்கிவிட்டார் முருகதாஸ். பொங்கலுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படத்தின் ஷூட்டிங் வரும் பிப்ரவரி மாதம் துவங்குகிறது. பிப்ரவரியில் துவங்கி சீக்கிரமாக ஜூலை மாதமே ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளார் முருகதாஸ்.