தளபதி 62 நியூ அப்டேட் ! இந்த மூன்றில் ஒன்று தான் படத்தின் டைட்டில் !

0
2560
vijay
- Advertisement -

விஜய்-62, இந்த படத்திற்காக தனது பேவர்ட் இயக்குனர் முருகதாஸுடன் ஜோடி சேர்ந்துள்ளார் விஜய். இவர்கள் இணைந்த இதற்கு முந்தைய படங்களான துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய இரண்டுமே மிகப்பெரிய ஹிட் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
vijayதற்போது படத்திற்கான ப்ரீ ப்ரொடக்சன் வேலைகளில் மும்மூரமாக உள்ளார் இயக்குனர் முருகதாஸ். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில், கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஏ.ஆர் ரஹ்மான், கிறிஸ் கங்காதரன், ஸ்ரீகர் பிரசாத் என ஒரு திறமைக்கு பஞ்சமில்லாத படக்குழு அமைந்திருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக சமூக அக்கறை கொண்ட படமாக விவசாயிகளின் பிரச்சனையை பற்றி பேசவுள்ளது.

மேலும், படத்தில் விஜய்க்கு இரண்டு கேரக்டர்கள். தற்போதைய படக்குழுவில் உள்ள ஒருவரின் தகவலின் படி படத்திற்கு மூன்று தலைப்புகள் உள்ளது. ‘ஏர்’, ‘கலப்பை’ மற்றும் ‘விவசாயி’ ஆகிய மூன்றில் ஒரு தலைப்பை முருகதாஸ் தேர்ந்தெடுக்க உள்ளார். படத்தின் சூட்டிங் பொங்கல் முடிந்து துவங்குகிறது.

Advertisement