விஜய் 62 பட ஷூட்டிங் இங்குதான் நடக்கிறதா..? படையெடுக்கும் ரசிகர்கள்.! எங்கு தெரியுமா.?

0
961
vijay-62

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விஜய் 62 ‘ படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. சமீப காலமாக இந்த படத்தை பற்றிய தகவல்களும் வெளியாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்னரும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வைரலாக பரவி வந்தது.

vijay-62

கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலக்ஷ்மி போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்து வருகிறது.

ஏற்கனேவே, இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம், சென்னை தி-நகரில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீடான ‘அன்னை இல்லத்தில் நடைபெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்து வருவதாள் பல ரசிகர்களும் அங்கே கூடி விட்டார்களாம்.

SUN_network_office

மேலும், ஏற்கனவே நடைபெற்ற ஷூட்டிங்கில் பாடல் காட்சிகள் ஒன்று படமாக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இந்த படத்தின் சில முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இம்மாதம் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.