விஜய் 63 கதை திருட்டு.! அட்லீ மீது நீதி மன்றத்தில் இயக்குனர் புகார்.!

0
560
Vijay63

விஜய் படங்கள் என்றாலே ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டு தான் வருகிறது. தலைவா படம் தொடங்கி இறுதியாக வெளியான சர்கார் படம் வரை விஜய் படங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இந்த நிலையில் விஜய் 63 படமும் புதிய பிரச்சனையை சந்தித்துள்ளது.

Image result for vijay atlee

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் திருட்டு கதை என்று நீதி மன்றத்தில் உறுதியானது அதனை முருகதாஸும் ஒப்புக்கொண்டார். சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : இரண்டு வருடத்திற்கு முன்பே ரகசிய திருமணம்.! மாப்பிள்ளைக்கு வயசு என்ன தெரியுமா.! 

- Advertisement -

இந்தநிலையில், சிவா என்றொரு குறும் பட இயக்குனர் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி தான் எடுத்த குறும் படத்தை மையமாக வைத்து விஜய் 63வது படத்திற்கான கதையை இயக்குனர் அட்லி ரெடி பண்ணியிருப்பதாக புகார் கூறி வருகிறார். 

அதோடு இந்த கதை திருட்டு விவகாரத்தை தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்துக்கும் அவர் கொண்டு சென்றிருப்பதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகியிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பாகவே இப்படி ஒரு சிக்கல் எழுந்துள்ளதால் விஜய் 63 படக்குழு குழப்பத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement