விஜய் 63 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்..!பயிற்சிகள் துவங்கியது..!

0
506
vijay63

விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார் அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் அட்லீ.விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை கடந்த செவ்வாய் கிழமை (நவம்பர் 13) நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகராபூர்வ அறிவிப்பை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது ஏ ஜி எஸ் நிறுவனம்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு விளையாட்டு வீரராக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியது. அதே போல இந்த படத்தின் போஸ்டரில் விஜய் 63 என்ற பெயர் விளையாட்டு வீரர்கள் சட்டையில் அச்சிடப்படும் எண்ணை போலவே இருந்ததால் கண்டிப்பாக இது விளையாட்டு சம்மந்தபட்ட இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் விளையாட்டு வீரராக நடிக்கவிருக்கிறார் என்றும், பெரும்பாலும் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்க உள்ளதாக நம்பகாரமான தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் விஜய்க்கு தனியாக ஒரு பயிற்சியாளரை அமைத்து பயிற்சிகளையும் துவங்க உள்ளனராம்.