விஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார் அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் அட்லீ.விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்ற தகவலும் ஏற்கனவே வெளியாகி இருந்தது.இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மூன்றாவது முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
ஆனால், அந்த தகவல் பொய்யானது என்று தெரியவந்தது, தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நாயகிகள் பற்றும் மற்ற நடிகர்களையும் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை சமந்தாவை விஜய்க்கு ஜோடியாக்க டிஸ்கஷன் நடைபெற்று வருகிறதாம்.
நடிகை சமந்தா ஏற்கனவே ‘தெறி’ , ‘மெர்சல்’ போன்ற படங்களில் சமந்தா நடித்துள்ளார். இருப்பினும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.