விஜய் 63 படத்தின் வில்லன் இவர் தான்.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

0
1159
Vijay-63
- Advertisement -

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய். விஜய்யின் 63 படமான இந்த படத்தின் பூஜை சற்று நேரம் முன்னர் சென்னையில் நடைபெற்றது. அதில் பட குழுவினர் அனைவரும் இடம்பெற்றிருந்தனர்.

-விளம்பரம்-

நயன்தாரா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கரின் மகள் போன்ற பலர் நடிக்க இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மெர்சல் படத்தை தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திலும் இசையமைக்கவுள்ளார்.

இதையும் படியுங்க : பூஜையுடன் துவங்கியது விஜய் 63.! வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள்.!

- Advertisement -

இந்த படத்தின் வில்லன் நடிகர் யார் என்பது நீண்ட நாட்களாக தெரியாத நிலையில் தற்போது டேனியல் பாலாஜி இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஏ ஜி எஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

-விளம்பரம்-

இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ‘வடசென்னை ‘ படத்திலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது தற்போது விஜய் 63 யில் மிரட்ட இருக்கிறார்.

Advertisement