அஜித்துக்கும் இருக்கும் நேர்மை ஏன் இவங்களுக்கு இல்ல.! வறுத்தெடுத்த துணை இயக்குனர்.!

0
1051
kp-selva

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் அட்லி. மெர்சல் படத்திற்கு பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனர் பட்டியலில் சேர்ந்து விட்டார். என்னதான் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தாலும் இவர் இயக்கி வரும் படங்கள் என்னவோ பெரும்பாலும் காப்பி கதைகளாகத்தான் இருந்து வருகிறது.

இவர் இறுதியாக இயக்கிய மெர்சல் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனைகளை குவித்தது இருப்பினும் இந்த படம் ரஜினி நடித்த மூன்று முகத்தின் அச்சு அசல் காப்பி என்று பலருக்கும் பச்சையாக தெரிந்தது. அதுபோக தற்போது அட்லீ இயக்கி வரும் விஜய் 63 படமும் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இதையும் பாருங்க : தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக வரப்போகும் அனுஷ்கா.! என்ன ஷோ தெரியுமா ? 

- Advertisement -

துணை இயக்குனர் செல்வா என்பவர் விஜய் 63 கதை தன்னுடைய கதை என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கதை திருட்டு குறித்து அட்லீயிடம் பேசிய போது இந்த பிரச்னையை கைவிட்டு விடுமாறு அட்லீ தன்னிடம் கூறியதாக செல்வா தெரிவித்திருந்தார்.

மேலும், இதுகுறித்து பேசியுள்ள செல்வா, அஜித் சார் கூட பில்லா என்ற படத்தை எடுத்தார், அவர் நினைத்திருந்தால், ரைட்ஸ் வாங்காமல், அப்படியே எடுத்துவிட்டு, வேறு ஒரு டைட்டிலில் ரிலிஸ் செய்யலாம். அந்த நேர்மை ஏன் இவர்களிடம் (அட்லீ) இல்லை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அனைத்திலும் உங்கள் பெயர் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கடுமையாக பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement