விஜய் 63 கதை திருட்டு புகார்.! குறும் பட இயக்குனரிடம் அட்லீ பேச்சு வார்த்தை.!

0
750
Vijay-63
- Advertisement -

விஜய் படங்கள் என்றாலே ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டு தான் வருகிறது. தலைவா படம் தொடங்கி இறுதியாக வெளியான சர்கார் படம் வரை விஜய் படங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இந்த நிலையில் விஜய் 63 படமும் புதிய பிரச்சனையை சந்தித்துள்ளது.

-விளம்பரம்-
Related image

கோபி செல்வா என்றொரு குறும் பட இயக்குனர் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி தான் எடுத்த குறும் படத்தை மையமாக வைத்து விஜய் 63வது படத்திற்கான கதையை இயக்குனர் அட்லி ரெடி பண்ணியிருப்பதாக புகார் கூறி வருகிறார். 

- Advertisement -

சமீபத்தில் கோபி செல்வா அளித்துள்ள பேட்டியில், நான் பெண்கள் கால்பந்து போட்டியை கதைக்களமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால், அதற்கிடையே இந்த கதையை அட்லீ இயக்க இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். 

இது தொடர்பாக அட்லீ மற்றும் பட குழுவிடம் பேசிய போது அவர்கள்,
உங்களுடைய படத்தை கைவிட்டு விடுங்கள் என்று கூறினார்கள். 
இதையடுத்து தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன்.
ங்க விதிகளின்படி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து ஆறுமாத காலத்துக்கு பிறகே கதைதிருட்டு புகார் அளிக்க முடியும் என்று கூறி எனது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் நான் மீண்டும் நீதி மன்றத்தை நாடியுள்ளேன். அந்த விசாரணை 23 ஆம் தேதி வருகிறது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement