இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் விஜய் 63 படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, விஜய் 63 குறித்து ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் ‘இது விஜய் 63 அப்டேட் கேட்கப்பதற்கு நேரமில்லை. pray for nesamani என்று பதிவிட்டுள்ளார்.’ இதனை கண்ட ரசிகர்கள் பலரும் லைக்ஸ்ஸை அல்லி வீசியுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக #Pray_for_Neasamani ஹேஷ் டேக் தான் சமூக வலைதளத்தில் டிரண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் , வைகைப்புயல் வடிவேலு புகைப்படத்தை பயன்படுத்தி பல்வேறு மீம்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. திடீர் என்று வைகைபுயல் வடிவேலு எப்படி ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தார் என்பது பலருக்கும் ஒரு அச்சாரமாக இருந்தது.