விஜய்யின் 64 வது படத்தை ராஜா இயக்க போவதாக சில வெளியாகி இருந்தன. மேலும், தனது அடுத்த படத்திற்காக விஜய் சூப்பர் குட் பிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் அதை இயக்க இயக்குனர் சிறுத்தை சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக நம்பகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் கைதி படத்தின் டீசரும் வெளியாகி இருந்தது.
விஜய்யின் 64 வது படத்தை பிரிட்டோ கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சேவியர் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய், சேவியருடன் இருக்கும் புகைப்படமும் அனிருத், சேவியருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும்வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த ராஷி கண்ணாவும் மற்றொருவர் கீதா கோவிந்தம் ராஷ்மிகா மந்தானா என்று கூறப்படுகிறது. இதில் ராஷ்மிகா விஜய்யின் பிகில் படத்திலேயே நடிப்பார் என்று எதிர்பார்க்கபட்டது.
விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் 64 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.